தைவான் விவகாரத்தில் மீண்டும் அமெரிக்கா சீனா இடையேயான மோதல் போக்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது தைவானுக்கு 8,000 கோடி ரூபாய்க்கு மேலான போர் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இது சீனா அமெரிக்கா இடையே மேலும் பதற்றத்தினை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையினாலேயே கடுப்பான சீனா, போர் ஒத்திகையினை பார்த்தது. எல்லை பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது.
ஆளில்லா விமானங்களை தைவான் எல்லையில் பறக்க விட்டது. இதுவே பெரும் பதற்றத்தினை அந்த சமயத்தில் ஏற்படுத்தியது.
100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகை கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!
போர் உபகரணங்கள் விற்பனை
ஆனால் தைவானும் நாங்கள் எல்லாவற்றிற்கும் தயாராகத் தான் இருக்கிறோம் என சீனாவுக்கு எதிராக நின்றது. இந்த நிலையில் தைவானுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா செயல்பட்டு வருகின்றது. அதனை வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்பாட்டிலும் நிரூபிக்கும் விதமாக, தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் உபகரணங்களை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆயுத விற்பனையை நிறுத்தணும்
ஆனால் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா உடனடியாக தைவானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும். தைவான் உடனான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பு
ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட விரும்புகிறது. சீனா அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்த விரும்புகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஆயுத விற்பனை குறித்தான எதிர்ப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
யாராலும் தடுக்க முடியாது?
தைவான், சீனாவின் தைவானாகும். தாய் நாட்டை முழுமையாக ஒன்றினைக்கும் வரலாற்று போக்கினை யாராலும் தடுக்க முடியாது. வெளி நாட்டு ஆயுதங்களை வாங்கி சுதந்திரம் தேடுவது தோல்வியில் தான் முடியும் என்பதையும் சீன தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் பொது மக்களின் கருத்துகளை யாரும் மீற முடியாது, நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள்.
கடும் நடவடிக்கை
தைவான் சுதந்திரத்திற்காக எந்தவொரு பிரச்சனையையும் சீனா முறியடிக்கும். இதற்காக ராணுவ போருக்கு பயிற்சி அளித்து தயாராகி வருகின்றது என்றும் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது. சீனா அதன் பாதுகாப்பினை வலுப்படுத்த கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்..
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
சீனாவை கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தவறான மற்றும் ஆபத்தான பாதையில் வழி நடத்தி செல்வதை தவிர்க்கவும். அமெரிக்க தனது அரசியல் நடவடிக்கை நிறுத்த வேண்டும் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
China warns US to stop arms sales to Taiwan
China warns US to stop arms sales to Taiwan/தைவானை பயன்படுத்தி சீனாவை கட்டுபடுத்த முடியாது.. மீண்டும் முட்டிக் கொள்ளும் சீனா – அமெரிக்கா