தோல் கழலை நோயால் ராஜஸ்தானின் பிகானீரில் ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்தது உண்மையா? வைரலான புகைப்படம்

பிகானீர்: ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் பரவுகிறது. கொசுக்கள் மற்றும் ஈக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இதனால் ராஜஸ்தானில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் பிகானீர் பகுதியில் தோல் கழலை நோய் காரணமாக ஆயிரக்கணக் கான மாடுகள் இறந்து கிடப்பது போன்ற படம் ஆன்லைனில் வைரலாக பரவுகிறது. பிகானீரில் நாள் ஒன்றுக்கு 250-க்கும் மேற்பட்ட மாடுகள் தோல் கழலை நோய் காரணமாக இறப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிகானீர் ஆட்சியர் பகவதி பிரசாத் கலால் கூறியதாவது:

ஆன்லைனில் வெளியான படம் உள்ள பகுதி பிகானீர் பகுதியில் இறக்கும் விலங்குகளின் உடல்களை அழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி. இறந்த விலங்குகளின் உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, அதன் தோல்கள் உரிக்கப்பட்டு, எலும்பு கள் காய வைக்கப்படும். இந்த எலும்புகளை ஒப்பந்தகாரர் விற் பனைக்காக எடுத்துச் செல்வார். இங்கு எப்போதும் சுமார் ஆயிரம் விலங்குகளின் உடல்கள் கிடக்கும். இது கழுகுகளின் புகலிடம். இந்த போட்டோதான் தற்போது ஆன்லைனில் வைரலாகி தவறான தகவல் பரப்பப்படுகிறது. தோல் கழலை நோய் காரணமாக இறக்கும் மாடுகள் இங்கு கொண்டுவரப்படுவதில்லை. அதற்கு தனியான பகுதிகளை ஒதுக்கி, அவற்றின் உடல்களை பூமிக்குள் புதைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தானின் பிகானீரில் 2,573 கால்நடைகள் இறந்துள்ளன என ராஜஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.