லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் நான்கு முக்கிய பொறுப்புகள் முதல் முறையாக வெள்ளையினத்தவர்களுக்கு வழங்கப்படாமல் கறுப்பினத்தவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதன் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த குவாஸி குவார்டெங்கை பிரிட்டன் நிதி அமைச்சராக லிஸ் டிரஸ் தேர்வுசெய்துள்ளார். இவரது பெற்றோர்கள் 1960-களில் கானா நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துவந்தவர்கள். அதேபோன்று, மற்றொரு கறுப்பினத்தவரான ஜேம்ஸ் கிளவர்லியை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமனம் செய்து லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளார்.
கிளவர்லி தாயார் மேற்கு ஆப்பிரிக்காவின் சியரா லியோன்நாட்டையும், தந்தை வெள்ளை யினத்தையும் சேர்ந்தவர்கள். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கலப்பின குழந்தையாக பிறந்து அனுபவித்த கொடுமைகளையும், கறுப்பின வாக்காளர்களுக்கு கட்சி இன்னும் அதிகமாக செயலாற்ற வேண்டும் என வெளிப்படையாக பேசி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றவர்.
அதேபோன்று, லிஸ் டிரஸ் அமைச்சரவையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலாபிரேவர்மேன் பிரிட்டன் உள்துறைஅமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜி னாமா செய்தார்.
சூலா பிரேவர்மேன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ்நாட்டை சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தில் குடியேறினார்.
அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்தகிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மேன்.
தென்கிழக்கு பிரிட்டனில் உள்ள போர்ஹாமின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சூலா பிரேவர்மேன் (42). இவர் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர். கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்,பிரதமர் பதவிக்கு போட்டியிட்டவர். இரண்டாவது சுற்றில் வெளியேற்றப்பட்டார்.
லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சூலா, பிரெக்ஸிட்டின் வாய்ப்புகளை பயன்படுத்தவும், நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும், வரிகளை குறைக்கவும் விரும்புவதாக தெரிவித் துள்ளார். லிஸ் டிரஸ் அமைச்சரவையில் துணை பிரதமர், சுகாதாரத் துறை அமைச்சராக தெரஸி காஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்றத்துக்கு மிகவும் மாறுபட்ட வேட்பாளர்களை நிய மனம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது லிஸ் டிரஸ் அமைச்சரவையில் பல்வேறு இனக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு பன்முகத் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.