பெங்களூரில் பெய்த மழையைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சில பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதால் பெங்களூரு இனியும் இந்தியாவின் சிலிக்கான் வேலி-யாக இருக்குமான என்று மக்கள் விவாதம் செய்து வருகின்றனர்.
இதேபோல் பெங்களூர்-க்கு மாறாக இனி இந்தியாவின் ஐடி ஹாப் ஆக நொய்டா மற்றும் குருகிராம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று சிலர் கூறியதால் பெங்களூர் குறித்த விவாதம் சீரியஸ் ஆக மாறியுள்ளது.
கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!

சென்னை, பெங்களூர்
இந்தியாவில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த வரும் நிலையிலும், சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது.

சிலிக்கான் வேலி
இதேவேளையில் நொய்டா போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்து வருவதாகவும், இந்தியாவின் சிலிக்கான் வேலி என்ற பட்டத்திற்குப் பெங்களூரு தகுதியானதா இல்லையா என்று விவாதங்கள் எழுந்துள்ளது.

ஆயுஷ் குப்தா
அப்பின்வென்டிவ் நிறுவனத்தின் அரசாங்க உறவுகளின் தலைவர் ஆயுஷ் குப்தா நொய்டாவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் விரைவில் தங்கள் தளத்தை நொய்டாவிற்கு மாற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

பெங்களூரு
பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, தோல்வியுற்ற உள்கட்டமைப்பு அமைப்பால் நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்கின்றன, மேலும் பெங்களூரில் போக்குவரத்து பெரும் கவலையாக உள்ளது என்றும் ஆயுஷ் குப்தா கூறினார்.

நொய்டா
மறுபுறம் நொய்டா வளர்ச்சியடைந்து வருகிறது, போக்குவரத்து நேரம், மழை அல்லது உள்கட்டமைப்பு என ஏதுவாக இருந்தாலும் சரியாக நிர்வகிக்கப்படும் நகரமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நகரத்தை மாற்றியமைத்ததற்காக யோகி அரசாங்கத்தைக் குப்தா பாராட்டினார்.

குருகிராம்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பெங்களூரை விடக் குருகிராம் சிறந்தது, விமான நிலையம் 20 நிமிடங்கள் தொலைவில் உள்ளது, கேப் எளிதாகக் கிடைக்கின்றன, மேலும் பெங்களூருடன் ஒப்பிடும்போது மெட்ரோ இணைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று மற்றொரு லிங்கிடு யூசர் கூறினார்.

பெங்களூர் Vs குருகிராம் Vs நொய்டா Vs புனே Vs ஹைதராபாத்
இப்படி டிவிட்டர், லிங்கிடுஇன் எனப் பல இடத்தில் பெங்களூர் Vs குருகிராம் Vs நொய்டா Vs புனே Vs ஹைதராபாத் என அனைத்து நகரங்களும் சிறப்பானது எனச் சண்டையிட்டு வருகின்றனர். உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தாலும் போதுமான திறன் வாய்ந்த ஊழியர்கள் இருக்கிறார்களா என்பது தான் முக்கியக் கேள்வியாக உள்ளது.

முக்கியக் கேள்வி..
பெங்களூரில் இருக்கும் விப்ரோ, அமேசான், கோல்ட்மேன் சாக்ஸ், பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை அடுத்தச் சில நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு நகரமாக இருந்தாலும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் அதை எப்படிச் சரி செய்யப்படுகிறது என்பது தான் முக்கியக் கேள்வி.
Bengaluru deserves India’s Silicon Valley title or not; noida, Gurugram developing fast debate on Linkedin
Bengaluru deserves India’s Silicon Valley title or not; noida, Gurugram developing fast debate on Linkedin பெங்களூரா..? நொய்டாவா..? அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்..!