முன்னாள் கணவர் பிராட் பிட்டிடம் 250 மில்லியன் டாலர் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏஞ்சலினா ஜோலி

வாஷிங்டன்: ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரும் தனது 12 ஆண்டுகாலக் காதலருமான பிராட் பிட்டைக் கடந்த 2014ம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்தார்.

இரண்டாண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் இருவரும் 2016ம் ஆண்டு பிரிந்தனர்.

ஹாலிவுட்டின் ஹாட் ஜோடி

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் ஒருவர். இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும் தனது 12 ஆண்டுகாலக் காதலருமான பிராட் பிட்டைக் கடந்த 2014ம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்தார். 2 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் இருவரும் 2016ம் ஆண்டு பிரிந்தனர். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் மூன்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவர்கள்.

குடும்ப நலனுக்காக பிரிந்தேன்

குடும்ப நலனுக்காக பிரிந்தேன்

பிராட் பிட்டைப் பிரிந்ததற்கான காரணம் குறித்து ஏஞ்சலினா ஜோலி ஒருமுறை பேட்டியளித்திருந்தார். அதில், ”நான் என் குடும்பத்தின் நலனுக்காக பிராட் பிட்டைப் பிரிந்தேன். அதுதான் சரியான முடிவு. என் குடும்பத்தினர் மீதான அக்கறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய மௌனத்தை சிலர் அவர்களது நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். என் குழந்தைகள் தங்களைப் பற்றி ஊடகங்களில் வரும் பொய்யான தகவல்களைப் பார்க்கும்போது, அவர்களிடம் நான் உங்களைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியும் என்று உணர்த்துகிறேன். உண்மையில் அவர்கள் 6 பேரும் மிகவும் துணிச்சலானவர்கள், உறுதியானவர்கள்”. எனக் கூறியிருந்தார்.

மனைவி மீது பிராட் பிட் வழக்கு

மனைவி மீது பிராட் பிட் வழக்கு

இந்நிலையில், தற்போது பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம், முன்னாள் மனைவியான ஏஞ்சலினா ஜோலி தாங்கள் கடந்த காலங்களில் இணைந்து நடத்திய ‘மிராவல் ஒயின்’ நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக நடிகர் பிராட் பிட் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், ஏஞ்சலினாவை எதிர்த்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் பிராட் பிட். அதில், ‘மிராவல் ஒயின்’ நிறுவனத்தின் பங்கை வேறொருவருக்கு ஏஞ்சலினா விற்றதாகவும், ஒப்பந்தப்படி அது தவறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஏஞ்சலினாவுக்கு பங்கு இல்லை

ஏஞ்சலினாவுக்கு பங்கு இல்லை

மேலும், தன்னை புண்படுத்த ஏஞ்சலினா முயல்வதாகவும், மிராவல் ஒயின்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு ஏஞ்சலினாவின் பங்கு எதுவுமே இல்லை என்றும் பிராட் பிட் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஏஞ்சலினா தனது பங்கை ஃபிரெஞ்சு நிறுவனமான ‘Tenute del mondo’-விடம் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிராட் பிட்டின் வழக்கறிஞர்கள் குழு குற்றஞ்சாட்டியிருந்தனர். ‘Stoli group’ எனும் ஓட்கா தயாரிக்கும் நிறுவனம் மிராவலின் சில ரகசிய தகவல்களைத் தெரிந்துகொண்டு தொழில் போட்டியில் முந்த நினைப்பதாகவும் பிராட் பிட் சார்பில் கூறப்பட்டிருந்தது. இதனால் பிராட் பிட்டின் மிராவல் ஒயின் நிறுவனத்தின் இத்தனை நாள் புகழுக்கு களங்கம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

ஏஞ்சலினா ஜோலிக்கு சாதகமான தீர்ப்பு

ஏஞ்சலினா ஜோலிக்கு சாதகமான தீர்ப்பு

பிராட் பிட் தொடர்ந்த இந்த வழக்கின் மீதான விசாரணையில் ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அதில், மிராவல் ஒயின் நிறுவனத்தின் உரிமை ஏஞ்சலினா ஜோலிக்கு.சாதகமாகவே அமைந்தது. இந்நிலையில், மிராவல் ஒயின் நிறுவனம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகக் கூறி, பிராட் பிட் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில், வதந்திகளை பரப்பி வரும் பிராட் பிட், 250 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏஞ்சலினா தனது மிராவல் நிறுவன பங்கை, ஃபிரெஞ்சு நிறுவனமான ‘Tenute del mondo’-விடம் விற்றுள்ளதாக் கூறி பிராட் பிட் வழக்கு தொடர்ந்ததுக்கு எதிராகவே, இப்போது அவரிடம் 250 மில்லியன் டாலர் கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.