போர்னியோ: தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
போர்னியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு கூடு 31 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த எலும்பு கூடு பல்வேறு காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
இந்த எலும்பு கூடு 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் லியோன் டேபா என்ற குகையில் இந்த எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
எலும்பு
அதோடு அந்த குகையில் 40 ஆயிரம் வருடம் பழமையான ஓவியங்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சுற்றி சுற்றி பல பறவை எச்சங்கள், மற்ற விலங்குகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு பல அரியவகை பூச்சிகளும் கூட இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த எலும்பு கூட மிக சிறப்பாக பதப்படுத்தப்பட்டு இருந்துள்ளது.
ஆபரேஷன்
இதில் கவனிக்க வேண்டிய விஷயமே, இந்த எலும்பு கூட்டில் இடது கால் மற்றும் வலது கால் பாதம் நீக்கப்பட்டு இருந்தது. இது வெட்டப்படாமல் சுத்தமாக நீக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு நபருக்கு மருந்து கொடுத்து, காலை முறையாக திட்டமிட்டு நீக்கினால் எப்படி மற்ற எலும்புகள் பாதிக்காமல் நீக்கப்படுமோ அப்படி நீக்கப்பட்டு இருக்கிறது. இத அர்த்தம் முறையாக மெடிக்கல் முறைப்படி இந்த எலும்பை நீக்கி இருக்கிறார்கள். அதாவது மருத்துவ முறைப்படி காலை நீக்கி உள்ளனர்.
பிரான்ஸ்
இதற்கு முன்பாக பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்றில் இதேபோல் கால்கள் நீக்கப்பட்டு இருந்தது. அதிலும் மருத்துவ முறைப்படி கால்கள் நீக்கப்பட்டு இருந்தன. அது 7000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தது. இப்போது 31 ஆயிரம் வருடம் பழமையான எலும்பு கூடு ஒன்றில் கால்கள் நீக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுதான் உலகிலேயே மருத்துவ ரீதியாக உடல் உறுப்பு நீக்கப்பட்ட மிக பழைய எலும்பு கூடு ஆகும்.
பழமையானது
இதன் மூலம் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கு மருத்துவ அறிவு இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. போரிலோ, அல்லது வேறு ஒருவர் தாக்கியோ இருந்தால் இப்படி எலும்பு முறிந்து இருக்காது. இந்த எலும்பு முறிவு கண்டிப்பாக அது மருத்துவ முறைப்படிதான் செய்யப்பட்டு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த எலும்பிற்கு சொந்தக்காரர் 20 வயது கொண்டவராக இருக்கலாம் என்று அதில் செய்யப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன்
இந்த ஆபரேஷனுக்கு பின்பு அந்த நபர் 6-9 வருடங்கள் உயிரோடு இருந்துள்ளார். ஏனென்றால் அந்த எலும்புகள் லேசாக வளர்ந்து உள்ளன. இதனால் இவருக்கு அந்த ஆப்ரேஷன் 14-16 வயதில் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்ரேஷன் செய்யப்பட்ட பின்பும் அவர் உயிரோடு இருந்துள்ளார். இதன் அர்த்தம் அந்த ஆப்ரேஷன் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட இந்த சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.