மெர்சிடஸ் பென்ஸ் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி… ஆயிரக்கணக்கில் வேலைநீக்கம்!

உலகம் முழுவதும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பணவீக்கம், மோசமான பொருளாதார நிலைமை உள்பட பல காரணங்களால் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகை கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!

3600 ஊழியர்கள்

3600 ஊழியர்கள்

மெர்சிடஸ் பென்ஸ் சமீபத்தில் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ மாநிலத்தில் செயல்படும் டிரக் மற்றும் பஸ் சேஸ் ஆலையை மறுசீரமைக்க இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ்

மெர்சிடஸ் பென்ஸ்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகப்படியான செலவு மற்றும் மாறிவரும் ஆட்டோமொபைல் துறையை எதிர்கொள்ளும் முயற்சி ஆகியவை காரணமாக பிரேசிலிய நகரமான சாவோ பெர்னார்டோவில் உள்ள ஆலையில் மறுசீர்திருத்தம் செய்ய இருப்பதாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி
 

உற்பத்தி

மெர்சிடஸ் பென்ஸ் பிரேசில் ஆலையில் காரின் முன் அச்சுகள் மற்றும் நடுத்தர டிரான்ஸ்மிஷன்களின் உற்பத்தி செய்யபப்டுகிறது. மேலும் காரின் தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளையும் அவுட்சோர்ஸ் மூலம் செய்து வருகிறது.

அறிக்கை

அறிக்கை

மெர்சிடஸ் பென்ஸ் பிரேசில் ஆலையின் மறு சீரமைப்புக்கு பின்னர் பஸ் சேஸ் மற்றும் டிரக்குகளின் உற்பத்தியில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைநீக்கம்

வேலைநீக்கம்

மெர்சிடஸ் பென்ஸ் பிரேசில் ஆலையில் இருந்து 2,200 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், மேலும் கூடுதலாக 1,400 ஊழியர்களின் தற்காலிக ஒப்பந்தங்கள் டிசம்பர் வரை புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கம் கோரிக்கை

தொழிற்சங்கம் கோரிக்கை

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கான முக்கிய தொழிற்சங்கமான Sindicato dos Metalurgicos do Grande ABC என்ற சங்கத்தின் நிர்வாகிகள் மெர்சிடஸ் பென்ஸ் குழுவைச் சந்தித்து பேச்சுவார்த்தை ஈடுபட்டதாகவும், வேலைநீக்க முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் மெர்சிடஸ் பென்ஸ் நிர்வாகம் வேலைநீக்கம் செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mercedes-Benz to lay off 3,600 workers in Brazil

Mercedes-Benz to lay off 3,600 workers in Brazil | மெர்சிடஸ் பென்ஸ் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி… ஆயிரக்கணக்கில் வேலைநீக்கம்!

Story first published: Thursday, September 8, 2022, 16:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.