கூகுள் நிறுவனம் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனது. அதன் செயலிகள் முதல் டிஜிட்டல் உலகில் அதன் செயல்பாடுகள் வரை பிரமாண்டமோ பிரம்மாண்டம் என்றே சொல்லலாம். ஏற்கனவே கூகுள் பிக்ஸல் மொபைல்கள் சந்தையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில்,
அதன் அடுத்த நிலை மாடலான கூகுள் பிக்ஸல் சீரிஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகியவற்றை வெளியிட உள்ளது. அதோடு சேர்த்து கூகுளின் முதல் ஸ்மார்ட் வாட்சும் வெளியாக உள்ளது.மேலும் ஏர்பட்ஸ் கூட வெளியாக உள்ளது. இந்த புது மாடலை கூகுள் தனது அடுத்த நிலை ப்ராசஸர்களோடு அக்டோபர் 6ஆம் தேதி made by google நிகழ்வில் வெளியிட போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதன் புதிய சிப் எது மற்றும் எந்த நிறங்களில் அது வெளியாகிறது? மற்றும் அதன் முதல் தயாரிப்பான கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட் வாட்ச் அம்சங்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.
கூகுள் பிக்ஸல் 7 சீரிஸில் கூகுளின் புதிய new Tensor G2 chipset பொருத்தப்பட்டு வெளியாக உள்ளது. new Tensor G2 சிப்செட் கூகுளின் அடுத்த நிலை அப்கிரேட் செய்யப்பட்ட சிப்செட். எனவே அதன் செயல்பாட்டின் மீது அபரிவிதமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த சிப்செட்டின் மூலம் மேம்படுத்தப்பட்ட கேமரா, வீடியோ, பாதுகாப்பு அம்சங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூகுள் பிக்ஸல் 7 Obsidian, lemongrass , and Snow நிறங்களிலும் மற்றும் கூகுள் பிக்ஸல் 7 மாடல் Obsidian, Hazel, and Snow ஆகிய நிறங்களிலும் வெளியாகும் என்று தெரிகிறது.
கூகுள் பிக்ஸல் வாட்ச்
கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியாகும் முதல் ஸ்மார்ட் வாட்ச் இந்த கூகுள் பிக்ஸல் வாட்ச் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள வீடியோவில் ஸ்மார்ட் அண்ட் கிராண்ட் லுக்கில் அதன் ஸ்மார்ட் வாட்ச் காட்சியளிக்கிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இணைந்து wear os 3 ஒத்துழைப்புடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதன் சிப்செட் Samsung Exynos 9110 chipset ஆக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வாட்ச் 32GB சேமிப்பு வசதியுடன் வருகிறது என்றும் கூறுகின்றனர்.
இவை அனைத்தோடு சேர்த்து பிற கூகுள் தயாரிப்புகளும் அக்டோபர் 6 made by google நிகழ்வில் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Google-Pixel விவரங்கள்முழு அம்சங்கள்