அங்கீகாரம் இல்லாத ஃபோரக்ஸ் வர்த்தக தளங்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியல்!

இந்திய ரிசர்வ் வங்கி இந்த வாரம் அங்கீகரிக்கப்படாத ஃபோரக்ஸ் வர்த்தகத்தின் மின்னணு வர்த்தக தளங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி அந்நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மேலும் தடைசெய்யப்பட்ட தளங்களை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்.. எவ்வளவு அதிகம்? முழு விவரங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கப்படாத ஃபோரக்ஸ் மின்னணு வர்த்தக தளங்களில் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து ரிசர் வங்கியின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்படாத மின்னணு வர்த்தக தளங்கள்பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பட்டியல்

பட்டியல்

இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களின் முழு பட்டியல் இதோ:

1 அல்பாரி
2 AnyFX
3 அவா வர்த்தகம்
4 பைனோமோ
5 eToro
6 Exness
7 நிபுணர்
8 FBS
9 FinFxPro
10 Forex.com
11 Forex4money
12 Foxorex
13 FTMO
14 FVP வர்த்தகம்
15 FXPrimus
16 எஃப்எக்ஸ்ஸ்ட்ரீட்
17 FXCM
18 FxNice
19 FXTM
20 HotForex
21 ஐபெல் சந்தைகள்
22 ஐசி சந்தைகள்
23 iFOREX
24 IG சந்தைகள்
25 IQ விருப்பம்
26 NTS அந்நிய செலாவணி வர்த்தகம்
27 ஆக்டா ஃஎக்ஸ்
28 ஒலிம்பிக் வர்த்தகம்
29 டிடி அமெரிட்ரேட்
30 டிபி குளோபல்
31 வர்த்தக பார்வை
32 நகர்ப்புற அந்நிய செலாவணி
33 எக்ஸ் எம்
34 எக்ஸ் டிபி

அந்நிய செலவாணி பரிவர்த்தனை
 

அந்நிய செலவாணி பரிவர்த்தனை

மேற்கண்ட பட்டியலை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலில் இடம்பெறாத ஒரு நிறுவனம் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதக்கூடாது என்றும் கூறியுள்ளது. FEMAவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட நபர்களுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ETP

அங்கீகரிக்கப்பட்ட ETP

அனுமதிக்கப்பட்ட அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் செயல்படுத்த முடியும் என்றாலும், அவை ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ETP களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI put out alert list of illegal forex trading apps, websites. Check full list

RBI put out alert list of illegal forex trading apps, websites. Check full list | அங்கீகாரம் இல்லாத ஃபோரக்ஸ் வர்த்தக தளங்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியல்!

Story first published: Saturday, September 10, 2022, 14:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.