அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள், அவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் எவ்வித அனுமதியையும் பெறாமல் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றையில் தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தில் இணைவதாகவே தீர்மானித்திருந்தோம்
சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மாத்திரம் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்து இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளமையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமது தனிப்பட்ட இலாப எதிர்ப்பர்ப்புகளை முன்னிலைப்படுத்தி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டமை குறித்து கவலையடைக்கின்றேன்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை
இது அருவருக்கத்தக்கது.
நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பட்டினி உட்பட கஷ்டங்களில் இருந்து மக்களையும் நாட்டையும் மீட்டெடுக்கும் சர்வக்கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவை வழங்க தீர்மானித்திருந்தது.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நேரத்தில், கட்சி மற்றும் கட்சியின் தலைமையுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்குவது மக்களை ஏமாற்று நடவடிக்கை என்பதுடன் மிகவும் அருவருப்பான நடவடிக்கை எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.