\"ஆள விடுங்க!\" படையெடுத்த விஷ எறும்புகள்! கிராமத்தையே காலி செய்த மக்கள்! குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள்

புபனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தையே எறும்புகள் கூட்டம் வெலவெலத்து போக செய்துள்ளது.

சாதாரண எறும்புகள் என்ன செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒடிசாவில் உள்ள கிராமத்தில் புகுந்துள்ள ஒரு வகையான எறும்புகள் அந்த ஊர் மக்களையே மிரள வைத்துள்ளது.

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பிரம்மன்சாஹி என்ற கிராமத்தில் புகுந்துள்ள புதிய வகை விஷ எறும்புகள் கிராமத்தையே நாசம் செய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஆய்வாளர்களும் விரைந்துள்ளனர்.

ஒடிசா

பிரம்மன்சாஹி கடந்த சில நாட்களாகவே இந்த எறும்புகளின் தொல்லை தாங்க முடியவில்லை. எங்குப் பார்த்தாலும் இந்த எறும்புகள் மயம் தான். வீடுகள், சாலைகள், அங்குள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்த இந்த எறும்புகள், கிராம மக்களையே ஓட வைத்துள்ளது. எறும்புகளுக்கு அஞ்சி இக்கிராமத்தில் வசிக்கும் 26 குடும்பங்களில் மூன்று குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர்.

 மிக மோசம்

மிக மோசம்

வீட்டுச் சுவர்கள், மரங்கள், சாலைகள் என எந்தவொரு இடத்தையும் இந்த எறும்பு கூட்டம் விட்டுவைக்கவில்லை. சாரை சாரையாக அந்தக் கிராமத்தை எறும்புகள் முற்றுகையிட்டுள்ளது. இதனால் சொந்த கிராமத்திலேயே மக்களால் வசிக்க முடியவில்லை. இரவு நேரங்களில் வெளியே வரும் மக்கள் எறும்புகளுக்கு அஞ்சி. பாலித்தீன் ஷீட்களை கொண்டு கால்களை மூடிக்கொண்டே வெளியே வருகிறார்கள்.

 சிவப்பு எறும்புகள்

சிவப்பு எறும்புகள்

இந்த கொடிய சிவப்பு எறும்புகள் அருகிலுள்ள கால்வாயில் இருந்து கிராமத்திற்குள் புகுந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க ஆய்வாளர்கள் மற்றும் எறும்புகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக இப்போது பெரும்பாலான இடங்களில் எறும்புகள் அழிக்கப்பட்டு உள்ளது.

 ஆய்வு

ஆய்வு

மேலும், ஆய்வுக்காக அந்த எறும்புகளில் சிலவற்றையும் எவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாகப் பூரி கலெக்டர் சமந்த் வர்மா கூறுகையில், “ஆய்வாளர்கள் அங்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்குச் சுகாதாரம் சிறப்பாக இல்லை. இதன் காரணமாகவே எறும்புகள் பல மடங்கு வேகமாகப் பெருகியது. கிராம மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

 எறும்பு கடி

எறும்பு கடி

அந்த கிராம மக்கள் கூறுகையில், “எறும்புகள் திடீரென வீட்டுக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கின. இதனால் குழந்தைகள், முதியவர்கள் எனப் பலருக்கும் தோலில் தடிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், சில தோல் பிரச்சினைகளையும் சந்தித்து உள்ளனர்.இதனால் ஒரு கட்டத்தில் எறும்பு சாக்பீஸை கையிலேயே வைத்துக் கொண்டு நடக்கும் சூழலுக்கும் நாங்கள் தள்ளப்பட்டோம்” என்றார்.

ஆசிட்

ஆசிட்

எறும்புகள் கடிக்கும்போது, அதில் இருந்து வெளிவரும் பார்மாலிக் ஆசிட் தான் இப்படி எரிச்சல் ஏற்படக் காரணம் என்று குறிப்பிட்ட OUAT மூத்த ஆய்வாளர் சஞ்சய் குமார், எறும்புகளை முழுவதுமாக அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இந்தப் பகுதியில் எறும்புகள் இருக்கும் என்றாலும் கூட இந்தளவுக்கு அவை எப்படி அதிகரித்து எனத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.