லண்டன்: இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறும்போது, அவரது மனைவி கார்ன்வால் இளவரசி கமீலா ராணியாக இருப்பார் என, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.
மன்னர் சார்லிஸின் மனைவி என்பதால், கார்வால் இளவரசி கமீலா (75), ராணி (குயின் கன்சார்ட்) என அழைக்கப்படுவார். ராணியின் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தை கமீலா அணிவார். இந்த கோஹினூர் வைரம் 14-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இந்தியா உட்பட 4 நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. பல சதாப்தங்களுக்கப்பின் இங்கிலாந்துக்கு புதிய ராணி கிடைத்துள்ளார். ஆனால் இங்கிலாந்து பட்டத்து ராணிக்குரிய அதிகாரங்கள் இவருக்கு இருக்காது.