இங்கிலாந்தியின் புதிய மன்னராக பதவி ஏற்ற சார்லஸ்..! – முதல் கன்னி உரையில் பேசியது என்ன..?

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு ராணி இங்கிலாந்து பிரதமராக சார்லஸ் பதவி ஏற்றார். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார்.

இந்த நிலையில் ராணி 2ம் எலிசபெத்தின் மகன் 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தற்பொழுது அரச குடும்பத்தினர் முன்னிலையில் அதிகாரப்பூர்வ மன்னராக சார்லஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றத்தை ஆர்வத்துடன் பலர் கண்டு மகிழ்ந்தனர்.

புதிய அரசராக பதவியேற்கவுள்ள 3-ம் சார்லஸ் முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நான் அறிவேன். மகாராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.

நாட்டு மக்களுக்கு மதம் கடந்து சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன். அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். அரசியல் சார்ந்த கோட்பாடுகளின் வழிதொடர்ந்து நடப்பேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார். “ என்று பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுள்ள சார்லஸ் தனது முதல் கன்னி பேச்சில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.