குருணை எனப்படும், உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. நம் நாட்டின் ஏற்றுமதியில் அரிசிக்கு முக்கிய பங்கு உண்டு. உள்நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஏற்கனவே சர்க்கரை, கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது உடைத்த அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதற்காக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. உள்நாட்டில் அதிகரிக்கும் தேவையை கருத்தில் வைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது.இதன் காரணமாகவே உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement