உணவகங்களுக்கு கடிவாளம் போடும் FSSAI.. மெனு கார்டில் இனி இது கட்டாயமா?

டெல்லி: இனி பெரிய மற்றும் சிறிய அளாவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெறும் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற FSSAI உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), விதிமுறைகளுக்கு உட்பட்டு, இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்ள வேண்டுமா.. இனி SMS போதும்?

கலோரியினை தெரிவிக்கணும்

கலோரியினை தெரிவிக்கணும்

இதன் மூலம் இனி உணவினை வாங்குபவர்கள் தங்களது ஆர்டரின் இருக்கும் பீட்சா, பர்கர், பட்டர் சிக்கன் என அதன் அளவை பொறுத்து, அதில் கலோரி விவரத்தினை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த கலோரி அளவை kcal என குறிப்பிட வேண்டும் என முன்னதாக தெரிவித்திருந்தது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

 

இதன் மூலம் உணவு பிரியர்கள் தாங்கள் சாப்பிடும் உணவின் கலோரி அளவை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வின் வளம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.

FSSAI-ன் இந்த விதிமுறையானது முதலில் பெரிய உணவகங்களில் இருந்து தொடங்கும் . படிப்படிப்பாக சிறிய உணவகங்களுக்கும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு பெரும்பாலான உணவகங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் பலரும் அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால அவகாசம்?
 

கால அவகாசம்?

ஏற்கனவே கடந்த 2020லேயே இது குறித்த அறிவிப்பினை FSSAI வெளியிட்டது. எனினும் உணவகங்கள் நடைமுறைக்கு கொண்டு வர ஜனவரி 1,2022 வரையில் அவகாசம் கேட்டது. அதன் பின்னர் மீண்டும் ஜூலை 1 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த அவகாசமும் முடிந்துள்ள நிலையில் இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிகாரர்ப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மெக் டொனால்டு போறீங்களா?

மெக் டொனால்டு போறீங்களா?

மெக் டொனால்டு அல்லது McVeggie போறீங்களா? நீங்கள் சாப்பிடும் பீட்சா, பர்கரில், சிக்கனில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையலாம்.

உடல் பருமனை குறைக்கவா?

உடல் பருமனை குறைக்கவா?

FSSAI இந்த விதிமுறையை அமல்படுத்த பல உணவகங்களும் கால அவகாசம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நாட்டில் உடற்பருமன் சிக்கலை கட்டுப்படுத்த, ஒரு முன் முயற்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

find of eating out? You can find out about the calorie content of the food in the menu card

find of eating out? You can find out about the calorie content of the food in the menu card/உணவகங்களுக்கு கடிவாளம் போடும் FSSAI.. மெனு கார்டில் இனி இது கட்டாயமா?

Story first published: Saturday, September 10, 2022, 21:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.