எல்லை மீறாதீங்க! பாஜக எம்பிக்களின் ஆடை, ஷூ, மோதிரம் பற்றி நாங்க பேசினால்.. அவ்ளோதான் -மஹுவா மொய்த்ரா

கொல்கத்தா: பாஜகவினர் எதிர்க்கட்சித் தலைவர்கள் அணியும் ஆடைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவித்து எல்லை மீறாதீர்கள் என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். இன்று காலை அங்கிருந்து நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி, கேரள மாநிலம் பரசலா பகுதிக்கு செல்கிறார்.

பாத யாத்திரை

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

 3,570 கி.மீ பயணம்

3,570 கி.மீ பயணம்

380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

டி சர்ட் சர்ச்சை

டி சர்ட் சர்ச்சை

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட் டி சர்ட் விலை ரூ.41,257 என புகைப்படத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி, “ஆடை குறித்து பேச வேண்டும் எனில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கூலிங் கிளாஸ் பற்றி பேச வேண்டும்.” என்று கூறியது. இந்த நிலையில் இன்று நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, சிராயன் குழி பகுதியில் டி சர்டை தூக்கிக் காட்டினார்.

மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, மஹுவா மொய்த்ரா, “எதிர்க்கட்சியினர் அணியும் உடைகள் மற்றும் உடைமைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் எல்லை மீறி கருத்துக்களை தெரிவிக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள். இதேபோல் நாங்கள் பாஜக எம்பிக்கள் அணியும் கடிகாரம், பேனா, ஷூ, மோதிரம் குறித்து பேசினால், இந்த விளையாட்ட தொடங்கிய நாளை நீங்கள் அழித்துவிடுவீர்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.