நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), பாஸ்டேக்கில் உள்ள பேலன்ஸினை தெரிந்து கொள்ள எஸ் எம் எஸ் சேவையினை தொடங்கியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சேமிப்பு கணக்கில் இருந்து டோல் கட்டணங்கள், பொருந்தக்கூடிய கட்டண தொகை கழிக்கப்படுகிறது. குறிச்சொல் ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் குறிச்சொல் கணக்கு செயலில் இருந்த பின் வாகனத்தின் விண்ட்ஸ்கிரீனில் ஒட்டப்படுகிறது.
மாதம் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா.. LIC-யின் சாரல் பென்ஷன் திட்டத்தை பாருங்க..!
எஸ் எம் எஸ் அனுப்பவும்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில். எஸ்பிஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது. எஸ்பிஐ பாஸ்டேக் வாடிக்கையாளர்களே, 7208820019 என்ற எண்ணுக்கு, உங்கள் பாஸ்டேக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, SBIFASTag balance- ஐ விரைவில் தெரிந்து கொள்ள எஸ் எம் எஸ் அனுப்பலாம்.
என்ன அனுப்பணும்?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, FTBAL என எஸ் எம் எஸ் அனுப்பவும். இது நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது உங்களது பாஸ்டேக் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளதை என்பதை அறிந்து கொள்ள முடியும். இதனால் பாஸ்டேக்குகளில் உங்களால் கடந்து செல்வதை தடுக்க முடியும்.
எஸ்பிஐ கணக்கு
பாஸ்டேக் ஜனவரி 15, 2020ல் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தனியார் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது.
மார்ச் 2022ல் எஸ்பிஐ அறிவித்த அறிக்கையின் படி, வாடிக்கையாளார்கள் பாஸ்டேக் சேவையினை பெற 1800 11 0018 என்ற எண்ணுக்கு தொடர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பாஸ்டேக் ப்ரீபெய்டு சேவையினை பெறலாம். இதில் பணம் இல்லாத சமயத்தில் டாப் அப் செய்து கொள்ளலாம்.
என்னென்ன தேவை?
எஸ்பிஐ-யின் பாஸ்டேக் கணக்கினை தொடங்க SBI FASTag, எஸ்பிஐ வங்கியில் பார்மினை கொடுக்கலாம். இதற்காக வாகனத்திற்காக ஆர்சி-யினை கொடுக்க வேண்டியிருக்கும். வாகன உரிமையாளாரின் போட்டோவினையும் கொடுக்க வேண்டும். மேலும் வாகன உரிமையாளாரின் ஐடி மற்றும் முகவரி சான்றிதழை கொடுக்க வேண்டியிருக்கும்.
பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது ?
பாஸ்டேக் கணக்கை வழங்குபவர் நிறுவனத்தின் வலை போர்ட்டலைப் பயன்படுத்தி ஆன்லைனில் இயக்க முடியும். டெபிட் / கிரெடிட் கார்டு / RTGS/ NEFT அல்லது நெட்பேங்கிங் மூலம் கணக்கை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யலாம். ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய, பரிவர்த்தனை செயலாக்க கட்டணத்திற்கு எதிராக வசதி கட்டணம் விதிக்கப்படுகிறது.
SMS service to know SBI fastag balance: here’s how
SMS service to know SBI fastag balance: here’s how/எஸ்பிஐ பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்ள வேண்டுமா.. இனி SMS போதும்?