கிருஷ்ணகிரியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு புடவை என்ற விளம்பரத்தால் பெண்கள் கூட்டம் இன்று அதிகாலை முதல் அலைமோதி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிரபல தனியார் ஜவுளிக் கடையின் இன்று முதலாம் ஆண்டை முன்னிட்டு, ஜவுளிக் கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை என்றும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதனால் இன்று அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள், ஆண்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர்.
இதையடத்து கடை திறந்த பின்பு அலைமோதிய கூட்டம் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு புடவைகளை வாங்கக் கடைக்குள் ஆர்வத்துடன் புகுந்தனர். மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.