திருவனந்தபுரம் :கேரளாவில், ஓணம் பண்டிகை காலமான செப்., ௧ – ௭ம் தேதி வரை, ௬௨௪ கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி, கஜானாவை நிரப்பி உள்ளது. கேரள மதுபான கழகத்தின் சேர்மன் யோகேஷ் குப்தா கூறியதாவது:கேரளாவில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கு முதல் நாளான ௭ம் தேதி, உத்திராடம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அன்றைக்கு கேரளா முழுதும் மது விற்பனை கொடிகட்டி பறந்தது.கொல்லத்தில் உள்ள ஒரு கடை, 1.06 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது.உத்திராடம் நாளில் மட்டும், மாநிலம் முழுதும், ௧௧௮ கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டு, ௮௧ கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில், ௭ம் தேதி வரை, ௬௨௪ கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, ௫௬௧ கோடி ரூபாயாக இருந்தது.ஓணம் சீசன் இன்னும் முடிவடையாத நிலையில், மது விற்பனை, ௭௫௦ கோடி ரூபாய்க்கு எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement