கணீர் குரலுக்கு சொந்தக்காரர் தொகுப்பாளர் சண்முகம் மறைவு..முதல்வர் இரங்கல்!

சென்னை : பிரபல செய்திவாசிப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் லகர, ரகர பிழைகளின்றி, குறிப்பாக ‘ழகர’ த்தை தனது உச்சரிப்பின் மூலம் தமிழக்கு மேலும் அழகு சேர்த்தவர் தொகுப்பாளர் சண்முகம்.

மதுரையை பூர்விகமாக கொண்ட இவர், செய்தியாளராக தனது ஊடக பணியை தொடங்கினார். சண்முகம் தனது கணீர் குரலின் மூலம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி சில காலங்களாக பேச்சாளராக, பல விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவருடைய தனித்துவமான குரலில் பல விளம்பரங்கள் இன்று தொலைக்காட்சியில் அலங்கரித்து வருகின்றன. 90களில் பிறந்த இளைஞர்களுக்கு இவரின் குரல்வளம் பேவரைட் ஆன ஒன்று.

இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் – ஒழுங்கான வாசிப்பு – துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.