உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்த போதிலும் அதில் சேராமல் விவசாயி ஆக மாறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சிறு பகுதியில் முதலில் அவர் டிராகன் பயிரை பயிரிட தொடங்கினார்.
தற்போது அதில் நல்ல லாபம் கிடைத்ததையடுத்து அவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்திலும் அவர் டிராகன் பயிர் பயிரிட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலக்டிரிக் ஜீப் தயாரித்து ஆனந்த் மஹிந்திராவிடம் வேலை கேட்ட தமிழ்நாடு இளைஞர்!
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி
உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் பட்டதாரி அதுல் மிஸ்ரா வித்தியாசமான பாதையில் உழைக்க முடிவு செய்துள்ளார். அலகஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட சிலுவா கிராமத்தை சேர்ந்த அதுல் மிஸ்ரா சென்னையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிடெக் படித்துள்ளார்.
வேலை வேண்டாம்
படிப்பு முடிந்ததும் தனது சொந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்து தனது மாவட்டத்தின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக சம்பளம் தரும் வேலை கிடைத்தும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இணையம் மூலம் டிராகன் பழம் குறித்து ஆய்வு செய்து, டிராகன் பழ சாகுபடியில் பரிசோதனை செய்ய முடிவு செய்தார்.
டிராகன் பழ சாகுபடி
2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் ஷோலாபூரில் இருந்து பிடஹயா என்றும் அழைக்கப்படும் டிராகன் பழத்தின் சில மரக்கன்றுகளை கொண்டு வந்து தனது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு தரிசு நிலத்தில் நடவு செய்தார். அவரது முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பழ விவசாயத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
7 ஏக்கரில் டிராகன் பழம்
எங்கள் குடும்பத்தின் இன்னும் ஏழு ஏக்கர் தரிசு நிலம் உள்ளது, அதில் அடுத்த பருவத்தில் டிராகன் பழம் விளைவிக்க திட்டமிட்டுள்ளேன் என்று அவர் பிடிஐ செய்தியாளர்களிடம் அதுல் மிஸ்ரா தெரிவித்தார். டிராகன் பழம் பயிரிடுவதற்கு மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் மட்டுமே வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் அதுல் மிஸ்ரா கூறினார்.
கோதுமையில் நஷ்டம்
முன்னதாக, அவரது குடும்பத்தின் மற்றொரு நிலத்தில் கோதுமை பயிரிடப்பட்ட நிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் விளைவிக்க ஆன செலவை விட குறைவான வருமானத்தை பெற்றதாகவும், பூஞ்சையிலிருந்து செடிகளை பாதுகாக்க பெரும் சிரமப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
டிராகன் பழ மரக்கன்று
ஆனால் தற்போது டிராகன் பழம் பயிரிட்டதில் தனக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளதாக கூறிய அதுல் மிஸ்ரா, சொந்தமாக டிராகன் பழம் பயிரிடுவது மட்டுமின்றி பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தன்னிடம் வரும் விவசாயிகளுக்கு டிராகன் பழ மரக்கன்றுகளையும் விற்பனை செய்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் என்னிடம் மரக்கன்று வாங்க வருபவர்களுக்கு டிராகன் பழத்தை வெற்றிகரமாக வளர்க்கும் டிப்ஸ்களையும் தருகிறேன் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிராகன் பழத்தின் பூர்வீகம்
டிராகன் பழம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஒரு வெப்பமண்டல பழமாகும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரப்படும் பழமாக இருக்கிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர். இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது.
Computer science graduate turns farmer in UP for cash-rich dragon fruit
Computer science graduate turns farmer in UP for cash-rich dragon fruit