குரூப் – 1 தேர்வு நவ.19-க்கு தள்ளிவைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நவ.19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை,நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டில் துணை ஆட்சியர் (18), காவல் துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் (13), வணிகவரி உதவி ஆணையர் (25), ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் (7),மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (3) என குரூப்-1 பதவியில்காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது.

அதில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜூலை 21-ல் தொடங்கி ஆக.22-ம் தேதி நிறைவு பெற்றது. அதன் பிறகு, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆக.27முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வுதள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுபற்றி டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அக்.30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட குரூப்-1 பணிக்கான முதல்நிலைத்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர்19-ம் தேதி நடத்தப்பட உள்ளது.கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தளங்களில் அறியலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.