பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக வெளிநாடுகளில் பல்வேறு விதமான நவீன கருவிகள் தொடர்ந்து அறிமுகம் ஆகி வருகின்றன. ஆனால் விலை மிக அதிகம் கொண்ட இந்த கருவிகளை நடுத்தர மக்கள் பயன் படுத்த முடிவதில்லை. இந்நிலையில், பார்வைத் திறன் இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில், பார்வை குறைபாடு கொண்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான புதிய ஹியர் சைட் HEAR SIGHT எனும் கருவி அறிமுக விழா கோவை துடியலூர் பகுதியில் உள்ள லலிதா மகால் அரங்கில் நடைபெற்றது.
கருவியை அறிமுகம் செய்து வைத்த நிர்வாக இயக்குனர்கள் அசோக் குரியன் மற்றும் டிம் வேதநாயகம் ஆகியோர் கூறுகையில், உலகிலேயே முதன் முறையாக இது போன்ற நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு இது மூன்றாவது கண் என கூறும் வகையில், இந்த கருவி செயல்படும் எனவும் கூறினர்.
முழுமையாகப் பார்வை இழந்தவர்கள் இந்த கருவியின் மூலம் யாருடைய உதவியுமில்லாமல் இயங்கலாம். கல்வி கற்க, உறவினர், நண்பர்களை அறிந்துகொள்ள, கணிணி இயக்குவது உள்ளிட்ட, எந்த வேலையும் செய்யவும் யாருடைய உதவியும் இல்லாமல் வெளியில் செல்ல என அனைத்துக்கும் உதவும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.