கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது மது விற்பனை.. இத்தனை கோடியா?

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் டாஸ்மாக் விற்பனை சாதனை செய்து வரும் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ஐந்து நாட்களில் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டே நாட்களில் 374 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்த நிலையில் ஐந்து நாட்களில் மொத்தம் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்கம் விற்பனை அமோகம்.. தீபாவளி-க்கு முன்பே இப்படியா..?

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் கேரள மக்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் ஓணம் பண்டிகை களைகட்டியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரத்தில் ரூ.624 கோடி மதிப்பிலான மதுவை கேரள மக்கள் குடித்துள்ளனர் என்றும் இந்த தொகை கடந்த ஆண்டை விட சுமார் ரூ.100 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மது விற்பனை

மது விற்பனை

கேரள மாநில குளிர்பானக் கழகத்தின் விற்பனைப் புள்ளி விவரப்படி, ஓணம் திருவிழாவை முன்னிட்டு, உத்ராடம் நாளான புதன்கிழமை ரூ.117 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. கடந்த ஆண்டு உத்ராடத்தன்று ரூ.85 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

 வரி வருவாய்
 

வரி வருவாய்

ஓணம் பண்டிகையின்போது மதுபான விற்பனை மூலம் கேரள அரசு ரூ.550 கோடி வரி வருவாயை பெற்றுள்ளதாகவும், மதுபான விற்பனை வரிகள் மாநில கருவூலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் ஒன்று என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மது குடிக்கும் ஆண்கள் - பெண்கள்

மது குடிக்கும் ஆண்கள் – பெண்கள்

கேரளாவில் மது அருந்துவது குறித்த ஆய்வுகளின்படி அம்மாநிலத்தில் உள்ள 3.34 கோடி மக்கள் தொகையில் 32.9 லட்சம் பேர் மது அருந்துகின்றனர் என்றும், இதில் 29.8 லட்சம் ஆண்கள் மற்றும் 3.1 லட்சம் பெண்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் குறைவு

கடந்த ஆண்டுகளில் குறைவு

ஓணத்தின் போது மது விற்பனை அதிகரிப்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் ஓணம் திருவிழாவின்போது மதுவிற்பனை குறைவாகவே இருந்தது.

 கோவிட்-19 மற்றும் வெள்ளம்

கோவிட்-19 மற்றும் வெள்ளம்

கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் மது விற்பனை குறைவாக இருந்தது. அதேபோல் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஓணம் சீசனில் மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்டதாலும் மதுவிற்பனை குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

In Onam Week Keralites Drank Liquor Worth Rs 624 Crore, Wednesday Saw Sale Of Rs 117 Crore

In Onam Week Keralites Drank Liquor Worth Rs 624 Crore, Wednesday Saw Sale Of Rs 117 Crore

Story first published: Saturday, September 10, 2022, 13:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.