கோடிகளில் லாபம்.. ரூ.1 லட்சம் ரூ.17 கோடி.. அது என்ன பங்கு.. எத்தனை ஆண்டுகள்!

நாட்டின் முன்னணி பார்மா நிறுவனங்களில் ஒன்றான, 51,456.63 கோடி ரூபாய் சந்தை மதிப்பினைக் கொண்ட டோரண்ட் பார்மா நிறுவனம், லார்ஜ் கேப் நிறுவனமாகும்.

பிரேசில் மற்றும் ஜெர்மனியிலும் மிகப்பெரிய சந்தை பங்கினை கொண்ட இந்திய பார்மா நிறுவனமானது, நீரிழிவு நோய், வலி மேலாண்மை, மகளிர் மருத்துவம், புற்று நோய் மருத்துவம், தொற்று நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல வகையிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றான இந்த பங்கு, நீண்டகால நோக்கில் நல்ல லாபகரமான பங்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.

பெங்களூர் பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை..!

ரூ.1 லட்சம் முதலீடு

ரூ.1 லட்சம் முதலீடு

டோரண்ட் பார்மா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1516 என்ற லெவலில் காணப்பட்டது. இதன் ஆல் டைம் உச்சத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, 21,434.80% லாபம் கிடைத்துள்ளது.

ஆரம்ப காலத்தில் இந்த பங்கு விலையானது 7.04 ரூபாயாக இருந்த காலகட்டத்தில், இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீட்டு செய்திருந்தால், உங்களால் 14,204 பங்குகளை வாங்கியிருக்க முடியும்.

3 முறை போனஸ்

3 முறை போனஸ்

இந்த நிறுவனம் மூன்று முறை போனஸ்- ஐ அறிவித்தது. 2006ல் 1:1 என்ற விகிதத்தில் அறிவித்தது. இதே 2013ல் 1:1 என்ற விகிதத்திலும், 2022ல் 1:1 என்ற விகிதத்திலும் அறிவித்தது.

2006ல் உங்கள் வசம் இருந்த 14,204 பங்குகள், 28,408 பங்குகளாக அதிகரித்திருக்கும். இதே இரண்டாவது முறையாக போனஸ் அறிவித்த போது 56,816 பங்குகளையும், மூன்றாவது முறை போனஸ் அறிவித்த போது, 113632 பங்குகளையும் பெற்றிருப்பீர்கள்.

கோடிகளில் லாபம்
 

கோடிகளில் லாபம்

தற்போதைய சந்தை விலை 1516*113632 உடன் கணக்கீடு செய்யும்போது அதன் மதிப்பு 17.22 கோடி ரூபாயாகும்.

டோரண்ட் பார்மா நிறுவனத்தின் நிகர விற்பனையானது கடந்த ஜூன் காலாண்டில், 2347 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2134 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 10% அதிகரித்துள்ளது.

செலவு அதிகரிப்பு

செலவு அதிகரிப்பு

இதன் வரிக்கு முந்தைய லாபம் 9.91% அதிகரித்து, 532 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 484 கோடி ரூபாயாக இருந்தது. இதே வரிக்கு பிந்தைய லாபம் 7% அதிகரித்துள்ளது. இது 330 கோடி ரூபாயில் இருந்து, 354 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிடா விகிதம் 3% அதிகரித்து, 742 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 

லாபம்?

லாபம்?

இதன் வரிக்கு முந்தைய லாபம் 9.91% அதிகரித்து, 532 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 484 கோடி ரூபாயாக இருந்தது. இதே வரிக்கு பிந்தைய லாபம் 7% அதிகரித்துள்ளது. இது 330 கோடி ரூபாயில் இருந்து, 354 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிடா விகிதம் 3% அதிகரித்து, 742 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தற்போதும் வாங்கலாமா?

தற்போதும் வாங்கலாமா?

இதன் வணிகத்தினை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் இந்த நிறுவனம், ஹெல்த்தியான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. குறிப்பாக உள்நாட்டில் வளர்ச்சி விகிதமானது வலுவான நிலையில் காணப்படுகின்றது. ஆக இதன் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலையினை நிபுணர்கள் 1820 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.1 lakh to Rs.17 crore: This pharma stock turns multibagggers on 3 bonus shares

Rs.1 lakh to Rs.17 crore: This pharma stock turns multibagggers on 3 bonus shares

Story first published: Saturday, September 10, 2022, 17:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.