புதுடில்லி, :’மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடந்த, ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியாகும்’ எனஅறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள், ஜூலையில் துவங்கி, கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தன. இந்த தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தியது.
இது குறித்து, பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து, தேசிய தேர்வு முகமை ஆய்வு செய்து வருகிறது.மத்திய பல்கலைகள் அனைத்தும், தேர்வு முடிவுகள் அடிப்படையில், சேர்க்கைக்கான நடவடிக்கைகளை உடனடியாக துவங்க வேண்டும். இதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும், ஆக., 20க்குள் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதுடன், பல கட்டங்களாகவும் நடத்தப்பட்டன. இதன் காரணமாக, முடிவுகள் வெளியாவது தாமதமாகி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement