சென்னை: தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் கடந்த வார இறுதி வர்த்தக நாளில் சற்று மேலாகவே முடிவடைந்துள்ளது. இது அதன் ஆறு வார சரிவு விலையானது 1680 டாலர்களில் இருந்து, மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இதே இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்துடனே முடிவடைந்துள்ளது.
இது ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில் வந்துள்ளது. இதுவே இதற்கான முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகின்றது.
சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..!
டாலரின் நிலவரம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 ஆண்டுகால உச்சமான 110.78ல் இருந்து 108.945 ஆக சரிவினைக் கண்டுள்ளது. ஆக இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
எப்படியிருப்பினும் நிபுணர்கள் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1680 – 1755 டாலர்களுக்குள் இருக்கலாம். இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 49,800 – 51,200 ரூபாய்க்குள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
விலை குறையும்போது வாங்கலாம்
தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைவது போல் காணப்பட்டாலும், முதலீட்டாளார்கள் ஷார்ட் ஆர்டர்களை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக சர்வதேச சந்தையானலும் சரி, இந்திய சந்தையானாலும் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
பணவீக்கம்
ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் வரவிருக்கும் கூட்டத்தில் நிச்சயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற போக்கே இருந்து வருகின்றது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு அதிகரிக்க வழிவகுத்தாலும், மறுபுறம் பொருளாதாரம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் நிலவி வரும் காரணிகளுக்கு மத்தியில், பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் காணப்படுகின்றது. ஆக வட்டி அதிகரிப்பால் மேற்கொண்டு பொருளாதாரம் மந்த நிலையை எட்டலாம். இதன் காரணமாக தங்கம் விலை வட்டி விகிதமே அதிகரித்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் முடிவு
ரஷ்யா ஐரோப்பாவுக்கு வழங்கவுள்ள கேஸ் பைப்லைனை நிறுத்தியது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு உலகம் முழுக்க எரிபொருள் விலையை மீண்டும் தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கச்சா எண்ணெய் விலையும் ஒபெக் நடவடிக்கையால் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, 4740 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து, 37,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, 5142 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,136 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 224 ரூபாய் குறைந்து, 51,420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 60.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 604 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 60,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.47,400
மும்பை – ரூ.46,750
டெல்லி – ரூ.46,900
பெங்களூர் – ரூ.46,800
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,400
gold price rebounds from 6 week low: is it a right time to buy?
gold price rebounds from 6 week low: is it a right time to buy?/தங்கம் விலை இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு.. வாங்க சரியான நேரமா?