தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.