தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியமும் தொடரும்.
200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதத்துக்கு ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.155 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
400 யூனிட்கள் வரை இரண்டு மாதங்களுக்கு ரூ.295 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு ரூ.595 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஜூலை 1ம் தேதி மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.