சென்னை : பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்ட, நிலையில் அவர் ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, கடந்த 2020ம் ஆண்டு பீயிங் வுமன் என்ற இதழை தொடங்கி சாதனை படைத்த பெண்களை பற்றி பத்திரிக்கை எழுதி உள்ளார்.
நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூரிகையின் உடல் மீட்கப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ளது. மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை
தற்கொலை தவறு
இந்நிலையில் தூரிகை 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முக நூல் பக்கத்தில், தற்கொலை எண்ணத்திற்கு எதிராக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், தற்கொலை வாழ்க்கையில் எந்த ஒரு முடிவினையும், ஒரு காரணத்தையும் விளைவையும் விட்டுவிடுகிறது. தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை, உங்கள் தற்கொலையால் யாரும் எதையும் இழக்க மாட்டார்கள்.
வாழ்க்கையை இழக்கிறோம்
ஆனால், நாம் நம் வாழ்க்கையை, நம் சிரிப்பை, இன்பத்தை, நம் அனுபவங்கள், நம் சிறு சிறு சந்தோசங்களையும் இழக்கிறோம், நம் வாழ்க்கையை முழுவதுமாக இழக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இறந்த பின்பு சமூக ஊடகங்களில் ஒரு கதையை வெளியிடுவார்கள், ஓரிரு நாட்கள் சோகமாக இருப்பார்கள். ஆனால் பெற்றோரின் வலி மற்றும் அவர்கள் உங்கள் மீது அவர்கள் பொழிந்த அன்பு? அந்த வலி ஈடுசெய்ய முடியாதது.
மறந்துவிடுவார்கள்
உறவுகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளனர் என்பதைப் பொருத்து, அவர்களின் நினைக்கக்கூடிய நாட்கள் நீடிக்கும். அது ஒரு வருடம் அல்லது 5 அல்லது 10 வரை இருக்கும். பிறகு அவர்கள் தங்கள் வழக்கமான பணிக்கு திரும்பிவிடுவார்கள். தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்கள். வாழ்க்கையில் அதன் ஓட்டத்தில் உங்களின் நினைவு சாதாரணமாக மாறிவிடும்.
இழப்பு உங்களுக்கு மட்டுமே
இழப்பு உங்களுக்கு மட்டுமே, உங்கள் மீதமுள்ள வாழ்க்கையை நீங்கள் இழக்கிறீர்கள். உங்கள் சொந்த அழகையும் புன்னகையையும் அனுபவிக்க தவறுகிறீர்கள். உங்கள் பல வருட புன்னகையை இந்த தருணத்தில் இழக்கிறீர்கள் என்பதே தற்கொலைக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மை.
பெண்கள் வலுவாக இருங்கள்
அன்பான பெண்களே, ஒரு பெண்ணாக இருப்பதால், அனைத்து அசாதாரணங்கள், உங்கள் வாழ்க்கையில் அன்பு செலுத்தி வலுவாக இருக்க வேண்டும்! பெண்கள் வலுவாக இருங்கள், வலுவாக மேம்படுத்துங்கள் என தற்கொலைக்கு எதிராக கடுமையாக பேஸ் புக்கில் கூறியுள்ளார். தூரிகையின் இந்த பதிவினை பார்த்தவர்கள் தற்கொலைபற்றி தெளிவானவரா இப்படி ஒரு முடிவை தேடிக்கொண்டார் என கேட்டுவருகின்றனர்.