திறமைகளை சேகரித்தேன்..என்ன செய்வதென்று எனக்கு தெரியும்! பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இலங்கை வீரர்


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை நின்று வெற்றி பெற வைத்த இலங்கை வீரர் நிசங்கா

28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிசங்கா 7 அரைசதம் அடித்துள்ளார்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை நின்று ஆட வேண்டும் என நினைத்ததாக இலங்கை வீரர் பதும் நிசங்கா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பாகிஸ்தான் நிர்ணயித்த 122 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.

குசால் மெண்டீஸ், குணாதிலகா ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினர்.

ஆனால் தொடக்க வீரர் பதும் நிசங்கா இறுதிவரை களத்தில் நின்று 48 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

Pathum Nissanka

PC: AFP 

போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் கூறுகையில், ‘போட்டியின் இறுதிவரை களத்தில் நிற்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் கூடுதல் வேகத்தை கொண்டிருந்தாலும், நான் எனது திறமைகளை சேகரித்தேன் மற்றும் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியும்.

அது தான் நடுவில் எனக்கு உதவியது. நிச்சயமாக இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேகத்தைப் பெற உதவும்’ என தெரிவித்தார்.  

Pathum Nissanka

PC: AFP Photo 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.