நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு கடலில் மூழ்கியதால் நீரில் தத்தளித்த 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியதில் நீரில் தத்தளித்த ஞானபிரகாசம், ராஜகுமார், செண்பகம், மனோ ஆகியோர் மீட்கப்பட்டனர்.