'நீட் தற்கொலைக்கு திமுக மட்டும்தான் காரணம்' – உதயநிதி, கனிமொழியையும் சேர்த்து தாக்கிய அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை தி நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை இன்று (செப். 10) சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”நீட் தேர்வை வைத்து பாஜக அரசியல் செய்யவில்லை. 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளின், ஆரம்பத்தில் நீட் தேர்வு ஏழுத கடினமாக தான் இருந்தது. ஆனால் அது சரி செய்யப்பட்டது.

மாணவர்களின் கைகளையும் , கண்ணையும் கட்டிவைத்து வீட்டு தமிழ்நாடு அரசு எந்த பயிற்சியும் அளிக்காமல், மாணவர்களை நீட் தேர்வை எழுத வைக்கின்றனர். திமுகவில் உள்ள குடும்பத்தினர் பிள்ளைகள் கவர்னர் கோட்டாவில் மருத்துவம் படித்தனர். நீட் தேர்வை நீக்க முடியாது. திமுக அரசு நீட் விவகாரத்தை கைவிட வேண்டும். நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் உள்ளது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் செயல்கள். இது வெட்கக் கேடானாது. 

நீட் தற்கொலைகளுக்கு காரணம் திமுகதான். அடுத்து யார் தற்கொலை செய்வார்கள், போய் பார்க்கலாம் என்று ரேஞ்ச் ரோவர் காரில் உதயநிதியும்,  ஓட்டமும் நடையுமாக கனிமொழியும் செல்கிறார்கள். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டை விட இந்தாண்டு 20 ஆயிரம் குறைந்துள்ளது.

டெல்லி முதல்வரை இங்கே கொண்டு வந்து அவர்களது மாடலை இங்கு பயன்படுத்துகிறார்கள். தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலம். டெல்லி மாடல் இங்கு அவசியமில்லை. ஆசிரியர்களை அரசியல்படுத்தி வைத்திருக்கிறது திமுக. என்னை தோற்கடிக்க அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தது ஜாக்டோ ஜியோ அமைப்பினர்தான். மாணவர்களின் சகிப்புத்தன்மை குறைந்திருப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வாய் திறப்பதில்லை. ராகுல் காந்தியின் பாத யாத்திரை என்பது  இந்தியாவினை ஒன்று  சேர்ப்பதாக தெரியவில்லை, பிரிப்பதாகவே தெரிகின்றது.” என்றார். 

முன்னதாக, 18 ஆண்டு காலமாக இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்த அனிதா பால்துரைக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் கார் பரிசளிக்கப்பட்டது. அதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அனிதா பாஜகவுக்கு நன்றி தெரிவித்தார். மற்றொரு நிகழ்வாக , 2019ஆம் ஆண்டு பாடி பில்டிங்கில் அர்ஜூனா விருதை வாங்கிய பாஸ்கரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி அகிலாண்டேஸ்வரி, அண்ணாமலையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதன்பின் பேசிய மாணவி சாமுண்டீஸ்வரி,”நீட் தேர்வுக்கு 45 நாட்கள் தான் படித்து, தேர்வெழுதி தற்போது தேர்வாகியுள்ளேன். நீட் தேர்வு கடினம் அல்ல, மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.