பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடன் உரையாடிய ராகுல்: பா.ஜ.க கிளப்பிய வீடியோ சர்ச்சை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கிறிஸ்டின் பாதிரியார் ஒருவருடன் பேசும் வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பாஜக கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது

இந்தியாவில் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும். கடந்த 2 தேர்தலிகளில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமனற தேர்தலில் வெற்றிபெற கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமாக ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை 3,570 கிலோமீட்டர் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கியதில் இருந்து அவர் மீதும் காங்கிரஸ் கட்சியின் மீது ஏராளமான விமர்சனங்களை தொடுத்து வரும் பாஜக தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ராகுல் காந்தி கிறிஸ்தவ மத போதகர் ஒருவருடன் உரையாடியாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவை வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு(பாஜக) காங்கிரஸ் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா இது குறித்து கூறுகையில், ஜார்ஜ் பொன்னையா என்று அடையாளப்படுத்திய ஒரு கிறிஸ்தவ பாதிரியாருடன் ராகுல் காந்தி உரையாடலின் வீடியோவை பகிர்ந்த அவர் “பாரத் டோடோ ஐகான்களுடன் பாரத் ஜோடோ?” பொன்னையா முன்பு “இந்து வெறுப்புக்காக” கைது செய்யப்பட்டவர் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், ஒரு குழுவில் ராகுல் பேசும்போது, இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவம். அது சரியா? என்று கேட்கிறார்.  அதற்கு, பாதிரியார், அவர் ஒரு உண்மையான கடவுள்… கடவுள் அவரை ஒரு மனிதனாக, வெளிப்படுத்துகிறார், அது ஒரு சக்தி என்று கூறுவது போல் உள்ளது.

இது குறித்து பாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், “பாஜக வெறுப்பு அரசியலின் ஒரு மோசமான ட்வீட் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள ஆடியோவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. #BharatJodoYatra வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிறகு மிகவும் அவநம்பிக்கையான பாஜகவின் வழக்கமான விமர்சனங்கள் தான் இது என்று கூறியுள்ளார்..

மேலும் ரமேஷ், “மகாத்மா காந்தியின் கொலைக்கும், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களின் கொலைகளுக்கும் காரணமானவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள்! என்ன ஒரு மோசமான வேடிக்கை” பாரத் ஜோடோ யாத்ராவின் உணர்வை சேதப்படுத்தும் அவர்களின் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.