ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தையை, வேறொரு தம்பதிக்கு விற்ற உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சங்கீதா என்ற பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அந்த மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அசோக் ரத்தோர், ‘ஏற்கனவே உனக்கு ஐந்து மகள்கள் உள்ள நிலையில், ஆறாவதாக பிறந்துள்ள இப்பெண் குழந்தையை உன்னால் கவனிக்க முடியாது’ என அப்பெண்ணிடம் கூறி, குழந்தையை ஒரு முஸ்லிம் தம்பதியிடம் விற்றுவிட்டார்.
இதை அறிந்த, ஹிந்து அமைப்பினர், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் டாக்டருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது தெரிந்து, மருத்துவமனையில் வாங்கிய குழந்தையை, அந்த முஸ்லிம் தம்பதியினர் திருப்பிக் கொடுத்து விட்டனர்.இது பற்றி அறிந்த மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கவுதம், அந்த மருத்துவமனைக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தார். அவர்கள் நடத்திய ஆய்வில், அது பதியப்படாமல் இருந்தது தெரியவந்தது.
உடனே, அக்குழுவினர் மருத்துவமனையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து, அசோக் ரத்தோர் தலைமறைவானார்.இது சம்பந்தமாக, போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement