பெட்ரூம் முழுக்க கட்டுக்கட்டாக பணம்.. ரூ.18 கோடி.. மெஷினே சூடாக எண்ணப்பட்ட ரொக்கம்.. ரெய்டில் பகீர்!

கொல்கத்தா : கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மொபைல் கேமிங் செயலியின் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் ஆமிர் கான் என்பவர் மீது கடந்த 2021-ம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, தொழிலதிபர் ஆமிர் கான் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 18 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கேமிங் ஆப் மூலம் மோசடி

ஸ்மார்ட் போன்களில் உள்ள ஒரு விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஆமிர் கான் மீது கடந்த 2021ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியை கொண்டு ஏமாற்றியதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட அமீர் கான் மற்றும் பலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரெய்டில் சிக்கிய ரூ.18 கோடி

ரெய்டில் சிக்கிய ரூ.18 கோடி

இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை கொல்கத்தாவில் இன்று 6 இடங்களில் சோதனை நடத்தியது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஆமிர் கானின் வளாகத்தில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரு அறையில் படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

படுக்கை அறை முழுக்க

படுக்கை அறை முழுக்க

இந்தச் சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்தப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ரெய்டில் ரூ. 18 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இன்னும் தொடர்கிறது.

 மெஷின்களை வரவழைத்து பணம் எண்ணும் பணி

மெஷின்களை வரவழைத்து பணம் எண்ணும் பணி

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு, பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, ரூ. 18 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபரின் வீட்டை சுற்றி அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.