போட்டோஷூட்டுக்கு தாமதித்த பிரித்தானிய மகாராணி: கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகைப்பட கலைஞர்!


போட்டோஷூட்டுக்கு தாமதமாக வந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்.

ராணியின் கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகழ்பெற்ற அமெரிக்க புகைப்பட கலைஞர்.

அரச கிரீடத்தை கழற்றுமாறு பிரபல அமெரிக்க புகைப்பட கலைஞர் அன்னி லீபோவிட்ஸ் (Annie Leibovitz) தெரிவித்ததற்கு பிரித்தானிய ராணி சற்று கோபத்துடன் பதிலளித்தது வரலாற்றின் பக்கங்களில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் அன்னி லீபோவிட்ஸ் கடந்த 2007ம் ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தை(Queen Elizabeth II) புகைப்படம் எடுக்க பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்.

போட்டோஷூட்டுக்கு தாமதித்த பிரித்தானிய மகாராணி: கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகைப்பட கலைஞர்! | Queen S Photographer Told Her To Take Tiara OffImage: PA

வெறும் 30 நிமிட குறுகிய புகைப்பட அமர்விற்கு, அன்னி தனது 11 உதவியாளர்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தயார் செய்ய மூன்று வாரங்கள் செலவிட்டார்.

இருப்பினும் புகைப்பட கலைஞர் அன்னி லிபோவிட்ஸின் சிறிய வேண்டுகோளால் பிரித்தானிய மாட்சிமையின் மெல்லிய கோபத்திற்கு ஆளானார்.

இது தொடர்பான விவரங்களை தெரிவித்து இருந்த அன்னியின் கூற்றுப்படி, ராணி போட்டோஷூட்டுக்கு தாமதமாகவே வந்திருந்தார், மேலும் குறிப்பாக அன்று அவர் நல்ல மனநிலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

போட்டோஷூட்டுக்கு தாமதித்த பிரித்தானிய மகாராணி: கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகைப்பட கலைஞர்! | Queen S Photographer Told Her To Take Tiara OffImage: PA

அத்துடன் அவர் தனது முதல் புகைப்படத்திற்கு ராணி கிரீடத்துடன், பண்டைய ஆர்டர் ஆஃப் தி கார்டரின்( ancient Order of the Garter )  உடையில் இருந்துள்ளார்.

அப்போது அன்னி ராணியிடம், கிரீடம் இல்லாமல் நன்றாக இருக்கும், கிரீடம் இல்லாமல் முயற்சி செய்யலாமா? ஏனென்றால் கார்டர் ரோப் அப்படி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதற்கு பிரித்தானிய மகாராணி அன்னியைத் திட்டி விட்டு குறைந்த ஆடைகளா? இது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டோஷூட்டுக்கு தாமதித்த பிரித்தானிய மகாராணி: கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகைப்பட கலைஞர்! | Queen S Photographer Told Her To Take Tiara OffImage: WireImage

கூடுதல் செய்திகளுக்கு: பல ஆயிரம் டாலருக்கு விற்பனையான….பிரித்தானிய மகாராணி உபயோகித்த டீ-பேக்

இது தொடர்பான விவரங்கள் 2007 இல் பிபிசிக்கு எடுக்கப்பட்ட ஏ இயர் வித் தி குயின்(A Year with the Queen) ஆவணப்படத்தின்  வீடியோவில் தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.