
போஸ் வெங்கட் இயக்கத்தில் மீண்டும் சாயாதேவி
பிரபல இயக்குனர், நடிகர் யார் கண்ணன், பிரபல நடன இயக்குனர் ஜீவா கண்ணன் ஆகியோரின் மகள் சாயாதேவி. போஸ் வெங்கட் இயக்கிய முதல் படமான கன்னிமாடம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆணவக் கொலைக்கு பலியாகும் பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றார். சிறந்த நடிப்புக்கு பல விருதுகளையும் பெற்றார். ஆனால் அதன் பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு படங்களில் கமிட் ஆனார் அந்த படங்களும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் மா.பொ.சி படத்தில் நடிக்கிறார். இதில் அவர் விமல் ஜோடியாக நடிக்கிறார். “கன்னிமாடம் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் சாயாதேவி. இந்த படத்தில் அச்சு அசல் மயிலாப்பூர் பெண்ணாக நடிக்க ஹீரோயின் தேடியபோது மீண்டும் சாயா தேவியே வந்து நின்றார். இந்த படத்தில் இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் போஸ் வெங்கட்.