எலிசபெத் மகாராணி உயிரிழந்துவிட்ட நிலையில் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பலர் தங்களின் பாஸ்போர்ட் இன்னும் செல்லுபடியாகுமா அல்லது மாற்றப்பட வேண்டுமா என கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஏனெனில் மகாராணி பெயரில் தான் பிரித்தானியாவில் பாஸ்போர்ட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பாஸ்போர்ஸ்ட் முன்னுரையிலும், அவரது மாட்சிமையின் மாநிலச் செயலர், அவரது மாட்சிமையின் பெயரை தாங்குபவர் அனுமதி அல்லது தடையின்றி சுதந்திரமாக கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதனால் தற்போது பிரித்தானிய பாஸ்போர்ட்டின் தன்மை குறித்து பலருக்கு கேள்வி எழுந்துள்ளது.
express uk
பாஸ்போர்ட்கள் சில மாற்றங்களுக்கு உட்படும்
ராணியின் பெயர் அல்லது முகம் கொண்ட பாஸ்போர்ட்கள் எதிர்காலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அடையாளம் காணும் வகையில் மாற்றங்களைச் சந்திக்கும்.
அதே நேரத்தில் ராணியைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் அது காலாவதியானவுடன் மட்டுமே அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
With the death of the Queen, are passports still valid or will they have to get changed?
— A Happy Speedbird Fan (@SpeedbirdFan) September 8, 2022
Now that the Queen is gone, does this mean we need to update our passport? It says we’re under the protection of “her” Majesty on the front page. Asking for a friend.
— AZ (@AimanZahry) September 9, 2022