பிரித்தானிய இணைப்பு கவுன்சில் விழாவில் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார் மூன்றாம் சார்லஸ்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் தன்னலமற்ற சேவைக்காக கௌரவிக்கப்பட்டார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.
பிரித்தானியாவில் நடைபெற்ற இணைப்பு கவுன்சில் விழாவில் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
பிரித்தானியாவை சுமார் 70 ஆண்டுகள் மற்றும் 214 நாட்கள் ஆட்சி செய்த தாயார் இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ளார்.
His Majesty The King gives a personal declaration at today’s Accession Council, where he was formally proclaimed King Charles III.
⚫ https://t.co/lZ6yrT9Y0Y pic.twitter.com/phalp3gxTo
— The Royal Family (@RoyalFamily) September 10, 2022
அத்துடன் பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றது வரலாற்றில் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பிரிந்த தாயின் “வாழ்நாள் அன்பு” மற்றும் “தன்னலமற்ற சேவைக்காக” கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்த விழாவில் உரையாற்றிய மன்னர் மூன்றாம் சார்லஸ், இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் அரசியலமைப்பு அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கும், மக்களின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கும் உலகெங்கிலும் உள்ள தீவுகள் மற்றும் காமன்வெல்த் பகுதிகள் மற்றும் பிரதேசங்களின் ஊக்கமளிக்கும் முன்மாதிரியை பின்பற்ற முயற்சிப்பேன் என உறுதியளித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிடம் இருந்து 30 கிராமங்கள் விடுவிப்பு: உக்ரைன் ராணுவத்தை பாராட்டிய ஜெலென்ஸ்கி
மன்னராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லஸ் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், அரச வாரிசாக வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக தனது மூத்த மகன் வில்லியம் மற்றும் கேட்-டை அறிவித்தார்.