முதலாளியின் வீட்டை இடிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த வளர்ப்பு நாய்: நெகிழ்ச்சி சம்பவம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள செல்வசமுத்திரம் பகுதியில் சுமார் 10-ஏக்கர் அளவிலான நீர்நிலை பகுதிகளை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியும், அருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்தும் வந்தனர். இதே பகுதியை சேர்ந்தவர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக அந்தப் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனை நிலமோ விவசாய நிலமோ இல்லை என்பதால் நீர்நிலையில் நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்தனர்.

ரவி என்பவருக்கும் அருகே இருந்த நடராஜனுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நடராஜன் என்பவர் வேறு ஒருவரின் பெயரிலும் 30 வருடங்களுக்கு முன்பாக இறந்து போன ஐந்து நபர்களை புகார் தாரர்களாக ஜோடித்து நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினரை காலி செய்ய வைக்கும் எண்ணத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு வழங்கியதை தொடர்ந்து அரூர் வட்டாட்சியர் கனிமொழி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. 

நடராஜன் என்பவர் வேறு ஒருவரின் பெயரில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால் அந்த வழக்கில் அவர் ஆக்கிரமிப்பு செய்த சுமார் ஐந்து ஏக்கர் நிலமும் உள்ளடங்கியது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காகவும் அரூர் வருவாய் மற்றும் காவல் துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். 

நடராஜன் ஆக்கிரமிப்பு செய்த 4.20 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பொழுது ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வளர்த்த பாசக்கார  வளர்ப்பு நாய் முதலாளியின்  வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்குவதை பார்த்து குறைத்துக் கொண்டே இருந்தது. மேலும், அது அங்கும் இங்கும் அலைந்து பொக்லைன் இயந்திரத்தை எதிர்த்து நின்று அகற்றும் பணிகளை தாமதப்படுத்தியது. 

இந்த நாயின் செயலை கண்ட காவல் துறையினர், பொதுமக்கள் அனுதாபத்துடன் வேடிக்கை பார்த்தனர். முதலாளியின் மீதும் அவரது வீட்டின் மீதும் இந்த அளவு அன்பும், அக்கறையும், நன்றியும் கொண்ட நாயின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிய்ல் ஆழ்த்தியுள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.