ராகுல் அணிந்த டி சர்ட் ரூ41 ஆயிரம்: இணையத்தில் வைரலாகும் பதிவுகள்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி நடத்தி வருகிறார். இவர், காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளது. ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம்.

மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற ஒரு டி-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டி-ஷர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவு வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாக பலர் பதிவிட்டுள்ளனர். ராகுல் காந்தியின் யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்திருப்பதை, அக்கட்சியின் டிவிட்டர் பதிவு காட்டுவதாக ஒரு பயனர் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ஆடைகளுக்கு பொது மக்களின் பணத்தை செலவு செய்யவில்லை என்று மற்றொரு பயனர் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவரது தாத்தா 70 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.160 கோடி நிலத்தை தானமாக வழங்கியவர் என்றும் காங்கிரசார் கூறுகின்றனர். பிறவியிலேயே பணக்காரர், இன்று ஏழைகளுடன் இருக்கிறார். ஆனால் ஏழை என்று கூறும் மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிகிறார் என்று அவரது பழைய கோட்டை போட்டு காங்கிரசார் பதில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.