வீடு ஒன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு


பதுளை – ஹிங்குருகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

55 மற்றும் 83 வயதான இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இருவரும் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுவதுடன் தாயும் மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். 

முகத்தை மூடிய நிலையில் வந்த சிலர் 

வீடு ஒன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு | Bodies Of Two Women Were Recovered From A House

லயன் குடியிருப்பு வீடொன்றில் வசித்து இரு பெண்களே
முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

62 வயதுடைய மற்றுமொரு மகள் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

வட்டிக்கு பணம் வழங்கியவர்கள்

எச்.எம்.ரன்மெனிக்கா (85) ஆர்.எம்.ஜெயவதி (55) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
ஆர்.எம்.மிசிநோனா என்பவர் (60) காயமடைந்துள்ளார்.

விசாரணைகளில் இருந்து இந்த பெண்கள் வட்டிக்கு பணம் வழங்கி வந்தவர்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.