செப்டம்பர் 7ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் 14 சீரிஸ் ஐபோன்களான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் . ஐபோன் 14 ப்ரோ , ஐபோன் 14 ப்ரோ ப்ளஸ் ஆகியவை வெளியாகியது. அதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் SE , ஆப்பிள் வாட்ச் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா , ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ ஆகியவையும் வெளியாகின.
ஆப்பிள் ஐபோன் 14ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை அதிநவீன A16 பயோனிக் சிப் பொறுத்தப்பட்டு வெளியாகியுள்ளன. மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்பிளே மீதான டைனமிக் ஐலேண்ட் ஆப்ஷன் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
செப்டம்பர் 7 அன்றே அமெரிக்காவோடு சேர்த்து இந்தியாவுக்கும் ஐபோன் வெளியிடப்பட்டது. எனவே பயன்பாட்டிற்கும் ஒரே நாளில் வரும்.
இந்நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதியான நேற்றிலிருந்து ஐபோன் 14 சீரிஸுக்கான ப்ரீ-புக்கிங் துவங்கி விட்டது.
உங்களுக்கு எந்த மாடல் மற்றும் நிறம் பிடித்துள்ளதோ அதுவே உங்களுக்கு மொபைல் பயன்பாட்டுக்கு வெளியாகும் தேதியன்று கிடைக்கும். ப்ரீ-புக்கிங் செய்வதற்காகவே ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் , ஐபோன் 14ப்ரோ , ஐபோன் 14 ப்ரோமேக்ஸ் ஆகியவற்றிற்கான ப்ரீ-புக்கிங் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து துவங்கி விட்டது. இந்நிலையில் ஆப்பிள் ஸ்டார், க்ரோமா, விஜய் சேல்ஸ், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகிய தளங்களில் ப்ரீ-புக்கிங் செய்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து ஆப்பிள் கிளை ஸ்டார்களிலும் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 14
128GB சேமிப்பு வசதி 79,900 என்ற விலைக்கும், 256GB 89,900 என்ற விலைக்கும் , 512GB 109900 என்ற விலைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஐபோன் 14 ப்ளஸ்
128GB சேமிப்பு வசதி 89,900 என்ற விலையிலும், 256GB 99,900 என்ற விலையிலும், 512GB 119900 என்ற விலையிலும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் தொடங்கியுள்ளது. அக்டோபர் 17இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஐபோன் 14ப்ரோ
128GB சேமிப்பு வசதி 1,29,900 என்ற விலைக்கும், 256GB 1,49,900 என்ற விலைக்கும் , 512GB 1,69,900 என்ற விலைக்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜில் 1,89,900த்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஐபோன் 14ப்ரோ மேக்ஸ்
128GB சேமிப்பு வசதி 1,39,900 என்ற விலைக்கும், 256GB 1,49,900 என்ற விலைக்கும் , 512GB 1,69,900 என்ற விலைக்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜில் 1,89,900த்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 லிருந்து ப்ரீபுக்கிங் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.