கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் பிரபல ஜவுளி கடையின் இன்று முதலாம் ஆண்டை முன்னிட்டு ஜவுளிக்கடைக்கு, முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு ஆபர்கள் வழங்கப்படும் என அறிவித்தது. இதனை அடுத்து அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள்,ஆண்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர்.
கடை திறந்த பின் அலைமோதிய மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு புடவைகளை வாங்க கடைக்குள் புகுந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க அதிகாலை முதல் குவிந்த பெண்கள் கூட்டத்தினால் விற்பனையாளர்கள் திக்குமுக்காடினர். பெருமளவிலான மக்கள் முண்டியடித்து கொண்டு புடவைகளை வாங்கிச் சென்றனர்.
ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க ஆசைப்பட்டு, தொற்று பரவல் பற்றி சிறிதும் கவலைப்படாமல், புடவை மோகத்தில் அலை மோதும் மக்கள் கூட்டம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது என்றால் மிகையில்லை.