அடுத்த 10 நாட்களில் புதிய கட்சி அறிவிக்கப்படும்- குலாம் நபி ஆசாத்

பத்து நாட்களில் புதிய கட்சி அறிவிக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கடந்த மாதம் 26ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி இருந்த நிலையில், அதில் காங்கிரஸ் கட்சியின் மீதும் ராகுல் காந்தியின் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அது அரசியல் தளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது. மேலும் குலாம் நபிக்கு ஆதாரவாக இருந்தவர்களும் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி குலாம் நபி ஆசாத் தனிகட்சி தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை ஆசாத் அறிவித்து வருகிறார்.
image
அதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஜம்மு காஷ்மீர் மக்களை முடிவு செய்வார் என அறிவித்தார்.
image
இந்நிலையில் இன்றைய தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருக்கும் குலாம் நபி ஆசாத், அடுத்த 10 நாட்களுக்குள் கட்சியின் புதிய பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆஷாத்தை தவிர ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு குலாம் நபி ஆசாதுடன் நாளைய தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் டாக் பங்களாவில் நடைபெறும் பேரணியில் இணைகின்றனர்.
image
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், நேற்றைய தினம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.