சென்னை
:
நடிகர்
விஜய்
தற்போது
வாரிசுப்
படத்தின்
சூட்டிங்கில்
விறுவிறுப்பாக
நடித்து
வருகிறார்.
இந்தப்
படம்
விஜய்யின்
66வது
படம்.
தொடர்ந்து
தளபதி
67
படத்திற்காக
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
இணையவுள்ளார்
விஜய்.
விரைவில்
இந்தப்
படத்தின்
அறிவிப்பு
வெளியாகவுள்ளது.
தளபதி
67
படம்
இந்த
ஆண்டின்
இறுதியில்
சூட்டிங்
துவங்கவுள்ளதாக
கூறப்படுகிறது.
இந்தப்
படத்தின்
அடுத்தடுத்த
அப்டேட்கள்
வெளியாகிவருகின்றன.
ஆனால்
எதுவும்
அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.
நடிகர்
விஜய்யின்
வாரிசு
படம்
நடிகர்
விஜய்
பீஸ்ட்
படத்திற்கு
பிறகு
தற்போது
வம்சி
படிப்பள்ளி
இயக்கத்தில்
வாரிசு
படத்தில்
நடித்து
வருகிறார்.
இந்தப்
படத்தின்
சூட்டிங்
இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ளது.
இந்தப்
படம்
பொங்கலையொட்டி
வெளியாகவுள்ளதாக
கூறப்படும்
நிலையில்,
விரைவில்
படத்தின்
சூட்டிங்கை
முடித்துவிட்டு
போஸ்ட்
புரொடக்ஷன்ஸ்
பணியில்
ஈடுபட
படக்குழு
திட்டமிட்டுள்ளது.

விஜய்யின்
தளபதி
67
படம்
இந்நிலையில்
இந்தப்
படத்தை
தொடர்ந்து
தனது
தளபதி
67
படத்திற்காக
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
நடிகர்
விஜய்
இணையவுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
இந்தப்படம்
குறித்த
அறிவிப்பு
இன்னும்
வெளியாகவில்லை
என்ற
போதிலும்
இது
உறுதிச்செய்யப்பட்ட
தகவலாகவே
உள்ளது.

தொடர்
அப்டேட்கள்
இந்தப்
படம்
குறித்த
பல
அப்டேட்களை
தொடர்ந்து
லோகேஷ்
கனகராஜ்
வெளியிட்டு
வருகிறார்.
இந்தப்
படத்தில்
கேங்ஸ்டராக
நடிகர்
விஜய்
நடிக்கவுள்ள
நிலையில்,
அவருக்கு
ஜோடியாக
நீண்ட
காலங்களுக்கு
பிறகு
நடிகை
த்ரிஷா
நடிக்கவுள்ளதாக
கூறப்படுகிறது.
மேலும்
படத்தில்
வில்லியாக
சமந்தா
களமிறங்கவுள்ளதாகவும்
கூறப்பட்டுள்ளது.

விரைவில்
அறிவிப்பு
இதனிடையே,
த்ரிஷா,
சமந்தா
தளபதி
67ல்
இல்லை
என்றும்
கீர்த்தி
சுரேஷ்தான்
விஜய்க்கு
ஜோடி
என்றும்
கூறப்படும்நிலையில்,
படத்தின்
அறிவிப்பு
வெளியானவுடன்,
இந்த
யூகங்களுக்கு
முற்றுப்புள்ளி
வைக்கப்படும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்
படத்தின்
சூட்டிங்
அக்டோபர்
மாதத்தில்
துவங்கவுள்ளதாகவும்
தகவல்கள்
தெரிவிக்கின்றன.

அறிவிப்பு
முன்பே
வசூல்
இந்தப்
படத்தின்
அறிவிப்பு
வெளியாகாத
நிலையில்,
தற்போது
தளபதி
67
படம்
கல்லா
கட்டத்
துவங்கியுள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்தப்
படத்தின்
ஓடிடி
உரிமையை
பிரபல
நிறுவனம்
120
கோடி
ரூபாய்க்கு
வாங்கியுள்ளதாக
கூறப்படுகிறது.
மேலும்
படத்தின்
சாட்டிலைட்
மற்றும்
இந்தி
ரீமேக்
உரிமை
உள்பட
இதுவரை
படம்
250
கோடி
ரூபாய்
வரை
வியாபாரம்
செய்துள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.

ரூ.250
கோடி
ரூபாய்
வசூல்?
விஜய்
படங்களுக்கு
என்று
தனியாக
ஒரு
மாஸ்
காணப்படுகிறது.
இதனுடன்
சேர்த்து
தற்போது
லோகேஷ்
கனகராஜ்
மார்க்கெட்
வேல்யூவும்
படத்திற்கு
கூடுதல்
அந்தஸ்தை
கொடுத்துள்ளது.
இவை
இரண்டையும்
கருத்தில்
கொண்டே
தற்போது
படத்தின்
வியாபாரம்
250
கோடி
ரூபாய்
வரை
சென்றுள்ளதாக
கூறப்படுகிறது.