ஆமை வேகத்தில் திமுக ஆட்சி.. மக்களின் கனவு காணல் நீராக போய்விட்டது.. அவினாசியில் கொந்தளித்த இபிஎஸ்!

திருப்பூர்: திமுக ஆட்சி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மற்றும் கோவையில் அதிமுக சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்த நிலையில் அவினாசியில் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எண்ணற்ற தடைகளை கடந்து உங்களின் துணையுடனும், நிர்வாகிகளின் துணையுடனும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஒரு விவசாயி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக கிடைக்கப் பெற்றது விவசாயிகளுக்கு கிடைத்த பெருமை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்காக கோரிக்கை வைத்தீர்கள். அவரது மறைவுக்குப் பின்னர், இந்த கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அதிமுக அரசு, ரூ.1652 கோடி மதிப்பீட்டில், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக நானே நேரில் வந்து இங்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றேன்.

அத்திக்கடவு – அவினாசி திட்டம்

இன்றைய தினம் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வறன்ட ஏரிகள் எல்லாம் நிரம்பியிருக்கும். பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீராக வெளியேறுகின்ற நீரெல்லாம், கடலில் போய் வீணாக கலக்கிறது. ஆனால் திமுக அரசு நாம் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தை துரிதப்படுத்தாமல், வேகப்படுத்தாமல், மெத்தனப்போக்கின் காரணமாக இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.

ஆமை வேகம்

ஆமை வேகம்

கிட்டத்தட்ட ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன், 2021 டிசம்பரில் அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவுபெற்று திறப்பதாக முடிவு செய்திருந்தோம். ஆனால், 2022 டிசம்பர் வந்தால்கூட இந்த திட்டத்தை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்தளவுக்கு துரிதமாக செயல்படக்கூடிய அரசு இந்த திமுக அரசு. ஆமை வேகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.

கமிஷன் கொடுத்தால் தான் சவுடு மண்

கமிஷன் கொடுத்தால் தான் சவுடு மண்

ஒரு சொட்டு நீர் கூட வீணாகக்கூடாது என்ற எண்ணத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்து திட்டத்தைக் கொண்டு ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் தூர் வாரினோம். தூர் வாரப்பட்ட மண்ணை விவசாயிகள் விலையில்லாமல் எடுத்துச் சென்று விவசாயிகள் அவர்களது நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று ஒரு லோடுக்கு ரூ.1000 கமிஷன் கொடுத்தால்தான் அந்த சவுடு மண்ணையே அள்ள முடியும்.

கானல் நீர்

கானல் நீர்

முதல்வர் ஸ்டாலினிடம் மக்கள் என்னென்னவோ எதிர்பார்த்தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததால், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவார்கள் என கனவு கண்டார்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராக போய்விட்டது. திமுக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பெட்ரோல் - டீசல் விலை

பெட்ரோல் – டீசல் விலை

பெட்ரோல் – டீசல் விலை குறைப்பதாக கூறினார்கள். ஆனால் பேருக்கு ரூ.3 குறைத்துள்ளனர். மத்திய அரசு விலை குறைப்பு செய்தும், மாநில அரசு செய்யவில்லை. அதுமட்டுமா, வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என்று மக்களை வாட்டி வதைக்கிறது திமுக அரசு என்று தெரிவித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.