காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோவொன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர், `இயேசுதான் உண்மையான கடவுள்… சக்தி அல்ல’ என்றுள்ளார். அக்கருத்துதான் சர்ச்சைக்கு தொடக்கமாக இருந்துள்ளது.
ராகுல் காந்தி தனது பாரத ஒற்றுமை யாத்திரையின் ஒருபகுதியாக, நடைபயணத்தின்போது பலரையும் சந்தித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்துள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருந்தது. அந்த வீடியோவின் குறிப்பிட்ட ஒருபகுதியின்படி, ராகுல் காந்தி பாதிரியாரிடம் `இயேசுதான் கடவுளின் வடிவமா? (Is Jesus christ form of god?)’ என்று கேட்கிறார். அதற்கு ஜார்ஜ் பொன்னையா, “இயேசுதான் உண்மையான கடவுள். அவர் தன்னை மனிதனாக, நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் நபராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார். சக்தியை போல அல்ல அவர். அதனால் நம்மில் ஒருவராக இயேசுவை அடையாளம் காணலாம்” என்றுள்ளார்.
George Ponnaiah who met Rahul Gandhi says “Jesus is the only God unlike Shakti (& other Gods) “
This man was arrested for his Hindu hatred earlier – he also said
“I wear shoes because impurities of Bharat Mata should not contaminate us.”
Bharat Jodo with Bharat Todo icons? pic.twitter.com/QECJr9ibwb
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) September 10, 2022
இந்தக் கருத்து பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் கருத்து மோதலையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, ராகுல் காந்தி குறித்து சாடி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “நடப்பது பாரத ஒற்றுமைக்கான யாத்திரை அல்ல, வெறுப்புக்கான யாத்திரை” என்றிருக்கிறார். மேலும் அவர், “இந்த யாத்திரையில், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய ஒரு பாதிரியார் ஒருவரை சந்திக்க வேண்டிய அவசியம் எங்கு ஏற்பட்டது?” என்றார்.
இவர் கடந்த வருடம் ஜுலையில் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் குறித்து வெறுப்பின் வெளிப்பாடாக சில கருத்துகள் கூறியதால், கைதாகியிருந்தார்.
பாஜக-வின் ஷெசாத் பூனவல்லா மேலும் பேசுகையில், “ராகுல் காந்தியின் வெறுப்பு யாத்திரை இது. இன்று இவர்கள் அனைவரும் சேர்ந்து, இந்துக்கள் தொடங்கி பாரத மாதா வரை பலர் குறித்து ஜார்ஜ் பொன்னையா பேசியிருக்கிறார். காங்கிரஸ், பலகாலமாக இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறது” என்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், “வழக்கமான பாஜக-வின் வெறுப்பு, பாரத் ஜோடோ யாத்ராவின் வெற்றிகரமான தொடக்கத்திற்குப் பிறகு இன்னும் அதிகரித்துள்ளது. மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள், நரேந்திர தப்ஹோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்பர்கி, கௌரி லங்கேஷ் கொலைகளுக்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய இவர்கள், இப்போது கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியொரு மோசமான நகைச்சுவை இது…! இதுபோன்ற முயற்சிகள் மூலம் பாரத் ஜோடா யாத்ராவை முறியடிக்க நினைத்தால், அந்த முயற்சி வீண்தான்” என்றுள்ளார்.
மற்றுமொரு ட்வீட்டில் இவரேவும், “பாஜக-வின் வெறுப்புக்கிடங்கை சேர்ந்தவர்கள், தரமற்ற ஒரு ட்வீட்டை வைரலாக்க முயல்கின்றனர். அந்த ஆடியோவை வைத்து, செய்யவேண்டிய வேலை என எதுவுமே இல்லை. இருப்பினும் பாஜக-வின் வழக்கமான அற்பமானதொரு முயற்சி இது. பாரத் ஜோடா யாத்திரை தொடக்கமே வெற்றி கண்டுள்ளதால், அவர்கள் மனமுடைந்து போயுள்ளனர்” என்றுள்ளார்.
இதற்கு பதிலளித்திருக்கும் பாஜக-வின் பூனவல்லா, “ராகுல்காந்தி எதற்காக பாரத மாதா குறித்து வன்மத்தை வெளிப்படுத்திய அந்நபரை (தமிழ் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா) சந்தித்தார்? ஒருவேளை அவருடன் ராகுல் காந்தி பேசவோ செய்யவோ எதுவுமே இல்லையென்றால் ஏன் அவர் சந்திக்க வேண்டும்? ஒருவேளை பாரத மாதா குறித்து அந்நபர் கூறிய கருத்துகளை ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா? ஒருவேளை அவர்தான் உங்கள் பாரத் ஜோடாவின் பாதிரியார் பிரிவை சேர்ந்த நபராக இருக்கின்றாரோ?” என்றுள்ளார்.
Jairam Babu – hate factory is when you say “big tree fell, earth shook” & defend Sajjan Kumar for 34 years
If George Ponniah has nothing to do with “Bharat Jodo” why was Rahul Gandhi endorsing & legitimising a hate monger who spewed venom against Hindus & Bharat 1/n pic.twitter.com/6T8ChTkYUk
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) September 10, 2022
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது மற்றுமொரு ட்வீட்டில், “இது முற்றிலும் போலியான வீடியோ. உரையாடலில் கூறப்பட்டதற்கும் ட்வீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. கூறப்பட்டதன் முழு உரையையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். பாரத் ஜோடோ யாத்ராவின் உத்வேகத்தைக் கெடுக்க பாஜகவால் பரப்பப்படும் பொதுவான தவறான பொய்கள் இவை. பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்ட பல காரணங்களா இந்தியா உடைந்து கிடப்பதால், மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாஜக பிளவுபட்டு காங்கிரஸ் ஒன்றுபட்டு வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக நிராகரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது” என்றுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM