உலக வரலாற்று பக்கங்களை திருப்பிப்பார்த்தால், யாராலும் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத பல பயங்கரவாத தாக்குதல்களை நாம் காண்போம். அதில், அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மிக முக்கியமானது. இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே கதிகலங்கச்செய்தது. அந்த பயங்கரவாத சம்பவத்தின் நினைவு தினம் இன்று. 2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்களும் சீட்டு கட்டை போல் நொறுங்கி விழுந்தன. இது தவிர மூன்றாவது விமானம் மூலம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பலரது உயிரை பலிகொண்ட இந்த கொடூர சம்பவத்துக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
9/11 என்ற இந்த நாள் சோகம் மிகுந்த நாளாக பார்க்கப்பட்டாலும், பலரது அற்புதமான வீரம் மற்றும் தன்னலமற்ற மனப்பாங்கின் ஒரு நாளாகவும் பார்க்கபப்டுகின்றது. தங்கள் நாடு ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்பதை புரிந்துகொண்ட பலர் நிஜ நாயகர்களாக உருவெடுத்தார்கள். இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்ததில், அந்த கட்டிடம் இருந்த இடத்திலிருந்து பல கிலீமீட்டர் தூரம் வரை புகை மண்டலமாக மாறிப்போனது. அதிர்ஷ்டவசமாக தப்பித்த சிலர் எங்கு ஓடுவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், பாதுகாப்பு படையினரோ, கட்டிடங்களில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்ற இடிபாடுகளை நோக்கி விரைந்தனர். அப்படி விரைந்து சென்ற வீரர்களில் பலர் திரும்பி வரவில்லை என்பது ஒரு சோகக்கதை. வரமாட்டோம் என்று தெரிந்தே பலர் சென்றனர் என்பது வியப்பூட்டும் உண்மை!!
September 11, 2001: A day that forever changed our nation. A day from which the Department of Homeland Security was born.
“I think that the greatest way we can pay tribute to those who lost their lives on 9/11 is through the work that we do.” – @SecMayorkas pic.twitter.com/qRLqTentsu
— Homeland Security (@DHSgov) September 10, 2022
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, பயங்கரவாதிகள் வணிக விமானங்களை ஏவுகணைகளாகப் பயன்படுத்தி நியூயார்க்கின் உலக வர்த்தக மையம், பென்டகன் மற்றும் பென்சில்வேனியா துறையில் மோதியதில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். வர்த்தக மையத்தின் 110-அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து தரைமட்டமாகின.
மேலும் படிக்க | ‘மூடாதே, மூடாதே… பள்ளிகளை மூடாதே…’ தாலிபன்களை எதிர்த்து மாணவிகள் போராட்டம்
9/11 தாக்குதல்களை அல்-கொய்தாவைச் சேர்ந்த 19 பயங்கரவாதிகள் நடத்தினர். அல்-கொய்தா மொத்தம் நான்கு விமானங்களை கடத்தியது. அல்-கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தின் இரட்டை கோபுரத்தில் மோதின. இதனால் இரட்டை கோபுரங்கள் எரிந்து இறுதியில் தரையில் விழுந்தன. மூன்றாவது விமானம் பென்டகனைத் தாக்கியது, நான்காவது, ஃபிளைட் 93, பென்சில்வேனியாவின் ஷாங்க்ஸ்வில்லில் ஒரு வயலில் விழுந்தது. கடத்தப்பட்ட மற்றொரு விமானமான ஃபிளைட் 93-ல் இருந்த பயணிகள் மூன்று அல் கொய்தா கடத்தல்காரர்களை எதிர்த்துப் போராடி, விமானம் அதன் இலக்கை அடைவதைத் தடுத்ததால், ஷாங்க்ஸ்வில்லில் உள்ள ஒரு வயலில் விழுந்து நொறுங்கியது.
9/11 பயங்கரவாத தாக்குதல்கள் உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது. பயங்கரவாதிகள் கொடூரமான வழியில், அதிகப்பட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், இவ்வளவு பெரிய திட்டத்தை தீட்டி தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற உண்மை உலக மக்களை அதிர வைத்தது. அதற்கு சாட்சியாக இந்த தாக்குதல் இருந்தது. 9/11 தாக்குதல்களுக்கு பிறகு அமெரிக்காவும் மாறிப்போனது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன.
21 years ago tonight, nearly 3000 people, including 23 members of the NYPD, spent their final night with their families and loved ones.
This evening, as the WTC Memorial “Tribute in Light” shines over NYC, our thoughts are with the families & friends of every soul lost on 9/11. pic.twitter.com/74NKfP0Ria
— NYPD 19th Precinct (@NYPD19Pct) September 11, 2022
இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க உறுதி பூண்ட அமெரிக்கா அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. அல்கொய்தா தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டான்.
பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், 9/11 தாக்குதல்கள், அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் இதயங்களிலும் ஒரு நீங்கா வடுவாக மாறிவிட்டது.
மேலும் படிக்க | மன்னர் சார்லஸின் வீங்கிய விரல்கள்… மருத்துவர்கள் கூறுவது என்ன..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ